30 Mar 2020

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு.

SHARE
(ஆனந்தன்)  


மட்டக்களப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்களை கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்னாந்து மாவட்டத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு நடைபெறுகின்றது அது தொடர்பான நடைமுறை பிரச்சனைகளை ஆராய்ந்து கொண்டனர்.

மாவட்டத்தில்  சகலவிதமான நடவக்கைகளும் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு மக்கள் அதிகமாக  ஒன்று கூடுகின்ற இடங்களை தவிர்த்துள்ளதாகவும் அதனைத்தவிர மரக்கறிவகைகள் வீதி வீதியாக வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாகவும் எவ்விதமான தட்டுப்பாடுகளும் இன்றி நியாயமான விலையில் விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதன்போது அரசாங்க அதிபர் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதியையும் அவர்களின் குழுவினர்களின் அற்பணிப்பு மிக்க சிறந்த சேவையினை பாரட்டினார். கொரோனா தனிமைப்படுத்தல் தடுப்பு முகாமை பராமரித்து மக்களின் மருத்துவ பரிசோணைகளையும் மேற்கொண்டு 14 நாட்களின் பின்னர் தங்களின் வீடுகளுக்கு உறவினர்களுடன் இணைக்கின்ற சேவைக்கு பாராட்டு தெரிவித்தார்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற நேரங்களில் அதிகமான மக்கள் நகரங்களில் அலைமோதுவதை கானக்கூடியதாகவுள்ளது. இவ்வாறான நிலையினை கட்டுப்படுத்துவதற்காக இரானுவத்தின் முழுமையான ஒத்துளைப்பினை வழங்குவதற்கு தன்னால் முடியும் என கிழக்கு கட்டளை தளபதி குறிப்பிட்டார்.

இச் சந்திப்பின் போது மேஜர் தம்மிக்க ஜெயசுந்தர 23 ஆம் பிரிவு கட்டளைத்தளபதி மற்றும் 23 ஆம் பிரிவின் விறிக்கெட் கொமான்டர் லங்கா பலக்கும்புற அவர்களும் இரானுவ உயர்மட்ட தலைவர்களும் கலந்துகொன்டு பலவிதமான பிச்சனைகளையும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  






SHARE

Author: verified_user

0 Comments: