27 Mar 2020

மண்முனை தென் எருவில் பற்றில் 1000 முச்சக்கரவண்டிகளுக்குத் தொற்று நீக்கம் - ஊடகங்களுக்குப் பாராட்டு.

SHARE

(ஜதுர்சயன்)

மண்முனை தென் எருவில் பற்றில் 1000 முச்சக்கரவண்டிகளுக்குத் தொற்று நீக்கம் - ஊடகங்களுக்குப் பாராட்டு.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிராமக்களிலுள்ள மற்றும், இப்பிரதேச முச்சக்கரவண்டி சங்கங்களினதும், சுமார் 1000 முச்சக்கர வண்டிகளுக்கு வெள்ளிக்கிழமை(27) கிருமித் தொற்று நீக்கம். செய்யப்பட்டுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, களுவாஞ்சிகுடி பொலிசார், பொதுசுகாதார வைத்திய பிரிவு, விசேட அதிரடிப்படையினர், உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து களுதாவளை பொது மைதானத்தில் முச்சக்கர வண்டிகளுக்குத் கிருமித் தொற்று நீக்குகும் பணி இடம்பெற்றது.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த தவிசாளர்…
எமது பிரதேசத்திற்குட்பட்ட குருக்கள்மடம், களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், கல்லாறு, முச்சக்கரவண்டி சங்கத்தினரதும், மற்றும் வீடுகளில் தனி நபர் பாவனைகளுக்கு மக்கள் வைத்திருக்கின்ற முச்சக்கர வண்டிகள், தனியார் பேரூந்துகள், உள்ளிட்ட அனைத்திற்கும் மருந்து தெழிந்து கிருமித் தொற்று நீக்கப்பட்டன. இது இப்பிரதேச மக்களுக்கு நாம் மேற்கொள்ளும் மிகவும் மகத்தான சேவையாகும். பரவி வரும் கொரோனா நோயை எமது பிரதேசத்தில் பீடிக்காமல், ஒழித்துக் கட்டுவதற்காக நமது நாட்டிற்கும், உலகத்திற்கும் ஒரு முன்னுதாரணமாக எமது செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஊரடங்குச் சட்டம் அவ்வப்போது, வருகின்றபோது எமது பிரதேச மக்ளைப் பாதுகாக்கின்ற பொறுப்பு எமக்கு உள்ளது. அவ்வேளைகயில் மக்கள் எமக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றார்கள். அதுபோல் ஊடகங்களும். ஊடகவிலாயர்களும், எமது பிரதேச மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றார்கள், அதுபோல் எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும், பொலிசார், விசேட அதிரடிப்படையினர், சுகாதாரத் துறையினர், பொது அமைப்புக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அதற்கு ஏற்றாற்போல் மக்களும் அடர்த்தியாக இல்லாமல், தனித்தனியாக தமது வீடுகளில் இருந்து ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வேண்டுகின்றோம். என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு மக்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதோடு, மக்கள் வங்கிக்கிளை, பாமஸி, மற்றும் வைத்தியசாலைகள் திறக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள், அனைத்தும் மூடப்பட்டு, பொதுப் போக்குவரத்துக்களும், நிறுத்தப்பட்டுள்ளன. பெலிசாரும், இராணுவத்தினரும், கடமையிலீடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.






























SHARE

Author: verified_user

0 Comments: