12 Feb 2020

புதன் அதிகாலை தென்கிழக்கு பகுதியில் நில நடுக்கம்.

SHARE
புதன் அதிகாலை தென்கிழக்கு பகுதியில் நில நடுக்கம்.
இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் புதன்கிழமை (12.02.2020) அதிகாலை 2.34 மணியளவில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து 240 கிலோமீற்றர் தொலைவில், தென்கிழக்கு கடற்பிராந்தியந்தில் 10 கிலோமீற்றர் கடல் பாறைக்குள் 5.4 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாத்தறை, அம்பலன்கொட ஆகிய பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


SHARE

Author: verified_user

0 Comments: