16 Jan 2020

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பால் பண்ணை உற்பத்தி வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது – பூ.பிரசாந்தன்.

SHARE
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பால் பண்ணை உற்பத்தி வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது – பூ.பிரசாந்தன்.
நல்லாட்சி அரசாங்கத் தினால் 50 ருபாயை கூட உயர்த்தி கொடுக்க முடியாமல் இருந்தது. தற்போது 1000 ருபா சம்பளத்தை உயர்த்தி கொடுத்த ஜனாதிபதியின் கரங்களை மலையக மக்கள் பலப்படுத்தவேண்டும். கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பால் பண்ணை உற்பத்தி வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது.  என தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (16) மட்டக்களப்பு உறுகாமத்தில் இடம்பெற்ற மாட்டுப் பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இதன்போது பால் பண்ணையாளர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகின்ற கால்நடைகள் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் பொங்கி வழிபாடுகள் இடம்பெற்றன. உறுகாமம் முத்து மாரியம்பாள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ குருகல சர்மா தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இங்கு பால் பண்ணையாளர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…


கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பால் பண்ணை உற்பத்தி வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது. கால்நடை வள்ர்ப்போர் தமக்கென்று பாரம்பரிய முறையில் வளர்ப்பதனால் கிழக்கு மாகாணத்திற்கான கால்நடை வளர்ப்பதற்கான விசேட திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டுமென நாம் தேர்தல் காலத்தில் ஜனாதிபதியிடம் கேட்டிருந்தோம். அந்த வகையில் தேசிய கொள்கைக்கு அப்பால் நாம் கால்நடை விசேட திட்டத்தை அமுல்படுத்துவதில் உறுதியாகவுள்ளோம். ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தின்பின் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ருபா சம்பளம் வழங்குவதாக கூறியுள்ளார் அதை நாம் வரவேற்கிறோம். 

தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பளம் கிடக்குமென கடந்த ஆட்சியாளர்களை நம்பி அந்த மக்கள் ஏமாந்துள்ளனர். நாட்டின் முதுகெலும்பாகவுள்ள தொழிலாளர்கள் சிறப்பாக இருந்தாலே நாட்டின் பொருளாதாரம் சுபீட்சமடையும். கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி அரசாங்கமென்ற பேரில் 50 ருபாவைக்கூட உயர்த்தி கொடுக்க முடியாமல் இருந்தது. தற்போது 1000 ருபா சம்பளத்தை உயர்த்திக் கொடுத்த ஜனாதிபதியின் கரங்களை மலையக மக்கள் பலப்படுத்த வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: