29 Dec 2019

பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட வேண்டும் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி.

SHARE
பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட வேண்டும் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி.
பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட வேண்டும் என்பதை ஓங்கி உரத்த குரலில் வலியுறுத்த வேண்டும் என மட்டக்களப்பு  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த்‪  தெரிவித்தார்.‬

மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில் பட்டதாரிகள், பல்கலைக்கழக மாணவிகள் உட்பட உயர்கல்வியை அடைந்து கொண்ட இரண்டாந் தலைமுறைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சட்டப்பாதுகாப்பு பற்றிய பயிற்சி நெறிகளில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

“அருவி” மட்டக்களப்பு  மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை 29.12.2019 தன்னாமுனை மியானி வள நிலைய பயிற்சிக் கேட்போர் கூடத்தில் நிகழ்வு இடம்பெற்றது.

அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மேலும் உரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி,

இளைய சமதாயத்தினரின் மத்தியில் மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றது.

அவற்றை சமூகத்திலுள்ள அடிமட்ட மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்கு இளைஞர் சமுதாயத்திலுள்ள அர்ப்பணிப்பான தன்னார்வலர்கள் பயிற்றுவிக்கப்படுவத்pல் இந்த மாவட்டத்தில் அருவி மாவட்ட பெண்கள் வலையமைப்பு காத்திரமான பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றது.

ஏற்கெனவே. அந்நிறுவனத்தினால் துறைசார்ந்த விற்பன்னர்களைக் கொண்டு உளநல ஆற்றுப்படுத்தல் பயிற்சிகள் வழங்கப்பட்ட அரச அலுவர்களும், தன்னார்வ அமைப்புக்களின் பணியாளர்களும் இருக்கின்றார்கள்.

இப்பொழுது பெண்களின் அறிவு சட்டத்துறையிலும் நாட்டின் சட்ட திட்டங்களை அமுல்படுத்துவதிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டு இரண்டாந் தலைமுறைப் பெண்களுக்கு சட்டப்பாதுகாப்பு பற்றிய பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

எனவே இவ்வாறானவர்களைக் கொண்டு கிராம சமூக மட்டத்தில் அடி நிலையிலுள்ளவர்களின் சமூக விடயங்களில் கூடுதல் அக்கறை செலுத்தும் வண்ணம் மாவட்டச் செயலகத்தின் வேலைத் திட்டங்கள் அமையவிருக்கின்றன.

இவ்வேலைத் திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் அதிகமதிகம் இடம்பெறவுள்ளன.

அந்த வகையில் அரச அதிகாரிகளும், துறைசார்ந்தவர்களும், சமூக நல உதவு ஊக்க அமைப்புக்களும் ஒன்றிணைந்து சமூகத்திற்குத் தேவையான திட்டங்களை அமுல்படுத்துவதில் இணைந்து பணியாற்ற வேண்டும்.

அரச அலுவலகங்களில் கடமை புரிகின்ற உள நல ஆற்றுகையாளர்களுக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிவில் சமூக மட்ட அமைப்புக்களில் பணிபுரிகின்ற செயற்பாட்டாளர்களுக்குமாக  மாவட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்கெனவே உளநல ஆற்றுப்படுத்தல் பயிற்சிகளை வழங்கியிருக்கின்றது.

அதேவேளை அந்த அமைப்பு இப்பொழுது சட்டத்தின் பாதுகாப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு இரண்டாந் தலைமுறைப் பெண்களுக்கு மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள், அடிப்படை உரிமைகள் உட்பட அனைத்து வகை  சட்டப் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கி இளம் பெண்களை நிலைப்படுத்தியிருப்பது பாராட்டத் தக்கது” என்றார்.








SHARE

Author: verified_user

0 Comments: