23 Dec 2019

சர்வதேச Abacus போட்டியில் பெரியநீலவணை மாணவரன் ரஜனிகாந்த் பிரெத்தியங்கராஷ் முதலிடம்.

SHARE
சர்வதேச Abacus போட்டியில் பெரியநீலவணை மாணவரன் ரஜனிகாந்த் பிரெத்தியங்கராஷ் முதலிடம்.

இந்தியாவின் சூபூனே பிரதேசத்தில் நடைபெற்ற 2019.12.15 அன்று நடைபெற்ற சர்வதேச அப்பாகஸ் (Abacusபோட்டியில் பங்குபற்றச் சென்ற இலங்கையின் முன்னணி நிறுவனமான ICAM Abacus  இன் தாறுல் இல்மு சாய்ந்தமருது நிலைய மாணவனாகிய ரஜனிகாந்த் பிரெத்தியங்கராஷ் (Rajanikanth Prethianharajh ஆகிய மாணவன் முதலாம் இடம் பெற்று சாம்பியன் பட்டத்தினைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.  

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணையைச் சேர்ந்த ரஜனிகாந்த் குமுதினி ஆகியோரின் புதல்வாரன இவர்  ICAM Abacus  இன் தாறுல் இல்மு சாய்ந்தமருது நிலைய அபாக்கஸ் கற்கும் மாணவன் ARISTO KIDS  இந்தியா பூனே இல் நடார்த்திய சர்வதேச போட்டியில் யூனியர் பிரிவு ஒன்றில் பங்கு பற்றி  சர்வதேச ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் 

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மாணர்வகள் பங்கு பற்றிப இப்போட்டியில் இவர் சர்வதேச மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று இலங்கைக்கும், பெற்றோருக்கும்,ICAM Abacus  நிறுவனத்திற்கும் பெருமையை ஈட்டிக் கொடுத்துள்ளார்.

இவர் கல்முனை கார்மேல்  பற்றிமா கல்லூரியின் தரம் நான்கில் கல்வி பயின்று வருகின்றார்.

மேலாக இவரை கற்பித்த மற்றும் வழிநடாத்திய  தாறுல் இல்மு நிலைய பணிப்பாளர், பயிற்ச்சி வழங்கிய ஆசிரியர்கள்,  மற்றும்  சர்வதேச போட்டிக்கு அழைத்துச்சென்ற ஆசிரியர்கள்  அனைவருக்கும் னது மகன் பிரெத்தியங்கராஷ் சார்பாகவும் எமது குடும்பம் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவரது தந்தை ரஜனிகாந் தெரிவித்துள்ளார்.






SHARE

Author: verified_user

0 Comments: