25 Nov 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் 7444 மாற்றுத்திறனாளிகள் இதுவரைக்கும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்கள்.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் 7444 மாற்றுத்திறனாளிகள் இதுவரைக்கும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம்போல் எமது மாட்டத்தில் மாத்திரமல்ல இந்த நாட்டின் எந்தவொரு மூலையிலும் இடம்பெறக்கூடாது அது நிகழாதிருக்கவும் நாம் அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.அரியதாஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுடனான கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை (25) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது. அதன்போது கலந்து கொண்டு கருத்தத் தெரிவிக்கையிலே அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்….
எமது மட்டக்களப்பு மாவட்டத்திலே அமைந்துள்ள 14 பிரதே செயலாளர் பிரிவுகளிலும் தலா ஒவ்வொரு மாற்றுதிறனாளிகள் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு தற்போது 14 அமைப்புக்கள் பிரதேச மட்டத்தில் இயங்கி வருகின்றன. இந்நிலையில அந்த 14 அமைப்புக்களையும் ஒருங்கமைத்து மாவட்ட மட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சம்மேளனம் உருவாக்கப்பட்டு அந்த சம்மேளனமும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. 
எமது மட்டக்களப்பு மாவட்டத்திலே 7444 மாற்றுத்திறனாளிகள் இதுவரைக்கும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் யாவரும் போர்,  விபத்து,  உள்ளிட்ட பல்வேறுபட்ட வித்திலே பவல்வேறுபட்ட சம்பவங்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளாக்கப்பட்டுள்ளார்கள். இருந்த போதிலும், போரினால், குறிப்பாக ஆயுதங்களினால் மாற்றுத்தினாளிகளாக்கப் பட்டவர்கள்தான் அதிகம்பேர் உள்ளார்கள். ஆனால் இனிவரும் காலங்களில் இந்தநாட்டிலே போர், யுத்தம், இல்லாமல் நாட்டு மக்கள் அனைவரும் அன்னியோனியமும், சமத்துவம், சமாதான வாழ்வும் ஏற்படவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்.
இதற்காகத்தான் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம்போன்ற அமைப்புக்கள் செயற்பட்டு வருவதோடு. நலிவுற்ற மக்களுக்கு தமது சேவைகளையும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக்கிளை திறம்படம மேற்கொண்டு வருகின்றது. அவர்களது இந்த சேவை தொடரவேண்டும், தெற்கு மட்டக்களக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் சம்மேளனம் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கும் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: