14 Oct 2019

சமூகங்களுக்கிடையில் தீவிரமான பிளவு நிலவுகிறது, அதை வளரவிட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூக அரசியல் செயல்முறைகளுக்கும் பெரும் அடியாக இருக்கும். சமன் செனவிரெட்ன - தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர்.

SHARE
சமூகங்களுக்கிடையில் தீவிரமான  பிளவு நிலவுகிறது, அதை வளரவிட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூக அரசியல் செயல்முறைகளுக்கும் பெரும் அடியாக இருக்கும்.
சமன் செனவிரெட்ன - தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர்.
நாட்டில் வாழும் சமூகங்களுக்கிடையில் தற்போது தீவிரமான  பிளவு நிலவுகிறது, அதை அப்படியே வளரவிட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூக அரசியல் செயல்முறைகளுக்கும் பெரும் அடியாக இருக்கும் என இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரெட்ன தெரிவித்தார்.

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் இனங்களுக்கிடையில்   இணக்கப்பாட்டின் மூலம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் எனும் செயற் திட்டம் சம்பந்தமாக அவர் திங்கட்கிழமை 14.10.2019 கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பான கருத்திட்டம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது…. இன விரிசல் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அமைதிக்கும் பெருத்த சவாலாக இருப்பதனால் இந்த விடயம் குறித்து உடன் செயற்பாட்டில் இறங்குமாறு செயற்பாட்டாளர்களுக்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

இன முரண்பாட்டுச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதோடு சிவில் சமூக அமைப்புக்;களும் இது தொடர்பாக  தலையிட முடியும்.

அதன்படி, இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் இலங்கை முழுவதும் உருவாக்கப்பட்ட மாவட்ட சர்வமத செயற்பாட்டுக் குழுக்கள் இவ் வேலைத்திட்டத்தின் பிரதான செயற்பாட்டுக் குழுவாக காணப்படுகின்றார்கள்.

நடைமுறையில் இனங்களுக்கிடையில் நிலவும் ஐயப்பாடான சூழ்நிலையைத் தணிக்க இலங்கை, சமூகங்களிடையே சகோதரத்துவத்தை  வளர்க்கும் திட்டத்தில் பின்வரும் நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரச அதிகாரிகள், பிரதான சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மதத் தலைவர்கள், மாவட்ட சர்வமத செயற்குழு உறுப்பினர்கள், இளைஞர் ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பு ஆர்வலர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டத்தில் உள்ள மத நல்லிணக்கத்ளத பாதிக்கும் சிக்கல்களை அளடயாளம் கண்டு இதனூடாக அரச நிருவாகத் தரப்பினரும் சிவில் சமூக ஈடுபாட்டாளர்களும் இணைந்து அமைதிக்கான வழிமுறைகளை வகுக்க முடியும்,

சமூக மாற்றிகளாக செயல்படக்கூடிய திறன் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பல்லின செயற்பாட்hளர்கள் நடைமுறையில் பரஸ்பர பின்னிப் பிணைந்த இன ஐக்கியத்தை உயிரூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
தொடரும் காலம் தேர்தலுக்கான காலம் என்பதினால் அரசியல் பிரதிநிதிகளை இணைத்துக்கொள்வது அவ்வளவு முக்கியமானதாக இல்லை என்பதோடு அவ்வாறு இணைத்துக் கொள்வது பல்வேறு பிளவுகளுக்கும் வழிவகுக்கும்

இனங்களுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் வகிபாகம் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனைப் பொறுப்பு வாய்ந்த ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் தமது பங்கையும் பணியையும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய் நிறைவேற்ற வேண்டுமென இலங்கை தேசிய சமாதானப் பேரவை எதிர்பார்க்கின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: