22 Oct 2019

இலங்கை கணக்கிடுதல் தொழினுட்பக் கழகத்தின் வருடாந்த சிறந்த பாடசாலை அறிக்கையிடுதலுக்கான விருது வழங்கும் விழா.

SHARE
இலங்கை கணக்கிடுதல் தொழினுட்பக் கழகத்தின் வருடாந்த சிறந்த பாடசாலை அறிக்கையிடுதலுக்கான விருது வழங்கும் விழா.
இலங்கை கணக்கிடுதல் தொழினுட்பக் கழகத்தினால் நடத்தப்படும் வருடாந்த சிறந்த அறிக்கையிடுதல் போட்டியில் தேசிய ரீதியில் வெற்றியீட்டிய பாடசாலைகளுக்கான விருது வழங்கும் விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை 28.10.2019 நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் பிற்பகல் ஒரு மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ள இந்நிகழ்வுகளில் கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்ஹ, இலங்கை வங்கி நிதி திட்டமிடல் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் ரஸ்ஸல் பொன்சேகா உட்பட கல்வி அமைச்சின் இன்னும் பல அதிகாரிகளும் இலங்கை கணக்கிடுதல் தொழினுட்பக் கழகத்தின் துறைசார் நிபுணர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த தேசிய விருதும், சான்றிதழும் பரிசும் வழங்கும் விழாவுக்கு தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்திலிருந்து பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை கணக்கிடுதல் தொழிநுட்பக் கழகத்தினால் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம் மூன்றாவது தடவையாக இம்முறையும் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.தில்லைநாதன் தெரிவித்தார்.

ஊழலற்ற சிறந்த கல்வி நிருவாகத்திற்கு வெளிப்படையான செயற்பாட்டு அறிக்கைகள் முக்கியம் என்பதால் சிறந்த பாடசாலை மட்ட நிருவாகத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டி வருடாந்தம் நடத்தப்பட்டு வருவது பாராட்டத்தக்கது என கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னுதாரணமான இந்நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில் வருடாந்த தேசிய விருதும், சான்றிதழும், பரிசும் வழங்கும் தலைநகர விழாவில் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர், அதன் பொருளாளர், வர்த்தகப் பிரிவின் தலைவர், உட்பட அப்பாடசாலையின் 3 மாணவத் தலைவர்களும் இலங்கை கணக்கிடுதல் தொழிநுட்பக் கழகத்தினால்  அழைக்கப்பட்டுள்ளார்கள். 

SHARE

Author: verified_user

0 Comments: