30 Sept 2019

ஓடுபவர்களுக்குத்தான் குழுக்கோஸ் கொடுக்கப்படும் கைதட்டுபவர்களுக்கு குழுக்கோஸ் கொடுப்பதில்லை.

SHARE
ஓடுபவர்களுக்குத்தான் குழுக்கோஸ் கொடுக்கப்படும் கைதட்டுபவர்களுக்கு குழுக்கோஸ் கொடுப்பதில்லை.
விளையாட்டுப் போட்டிகளில் ஓடுபவர்களுக்குத்தான் குழுக்கோஸ் வழங்கி ஊக்கப்படுத்தப்படும், மாறாக ஓடுபவர்களை ஊக்கப்படுத்துவதற்ககாக கரையிலே இருந்து கொண்டு கைதட்டுபவர்களுக்கு ஒருபோதும் குழுக்கோஸ் வழங்கப்படுவதில்லை. அதுபோல் கிராம மக்ககளும், எமக்கு யாரும் அது தரவில்லை, இது தரவில்லை என பிறரை குறைகூறிக்கொண்டிருக்காமல் கிராமதினதும், அங்குள்ள மக்களினதும் வளர்ற்சிக்காக கிராமத்திலுள்ள வளங்களை வைத்துக் கொண்டு முயற்சிகளை எடுக்கவேண்டும். 
என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக்கிளையின் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான த.வசந்தராஜா தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒல்லிமடுவால் எனும் கிராமத்தின் தேவகளை அறிந்து கொள்வதற்காக திங்கட்கிழமை (30) அக்கிராமத்திற்கு விஜயம் செய்து அம்மக்களிடம் கலந்துரையாடி அவர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

கிராமமட்டத்தில் காணப்படுகின்ற சிறு, சிறு தேவைகளை கிராமதிலுள்ள இளைஞர், யுவதிகள், பெரியோர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து சிரமதானங்கள் மூலமும், பொது நிகழ்வுகள் மூலமும், அவற்றைச் செய்து முடிக்கலாம், பாடசாலைச் சூழலைச் சுத்தம் செய்தல் வீதியில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றுதல், கிராமத்தைச் சுத்தமாக வைத்திருத்தல், உள்ளிட்ட வேலைகளை முன்மாதிரியாக மக்கள் ஒன்றிணைந்து செய்து காட்டினால் உதவி செய்ய வருபவர்களுக்கும் மனதில் ஓர் சந்தோசம் ஏற்படும். 

இப்பகுதி மக்கள் கிராமங்களை முன்னேற்றுவதற்கு ஓரளவு முயற்சியுடன் செயற்படுகின்றார்கள், இவ்வாறானவர்களுக்குத்தான் நாமும் உதவி செய்யவேண்டும் என நினைத்து வெளியிலுருந்த வரும் அரச சார்பற்ற அமைப்புக்களும், அரசாங்க அமைப்புக்களும், தாமாகவே உதவி செய்வதற்கு முன்வருவார்கள். 

இவற்றினை விடுத்து வெறுமனே இருந்து கொண்டு தமக்கு யாரும் உதவி செய்ய முன்வருவதில்லை என யாரையும் குற்றம் சுமத்துவதில் எதுவித பலனுமில்லை. எனவே இக்கிராமதிலுள்ள மக்கள் அனைவரும் கிராமத்தை முன்நேற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள், உங்களைப் போன்றவர்களுக்கு நாம் உதவுதற்கும், ஏனைய உதவி வழங்குனர்களை உங்களுடன் இணைத்து விடுவதங்கும் நாம் பின்னிற்கமாட்டோம், என அவர் தெரிவித்தார்.

இதன்போது அக்கிராமத்து மக்கள் தமக்கு மிக நீண்டகாலமாகவிருந்த குடிநீர்ப் பிரச்சனையை எதிர் கொண்டு வருவதாகவும், அதற்கு ஒரு பொதுக்கிணறு அமைத்துத்தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர். இந்நிலையில் இந்நிழவில் கலந்து கொண்டிருந்த மட்டக்களப்பிலிருந்து சமூகசேவையில் ஈடுபட்டுவரும் வாசம் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் வி.பிரபாகரன் அக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அக்கிராமத்தில் மக்களால் தெரிவு செய்யப்படும் ஒரு இடத்தில் பொதுக் கிணறு ஒன்றை அமைத்துத்தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். இதன்போது வாசம் உதவும் கரங்கள் அமைப்பினால் அக்கிராமத்திலுள்ள மாணவர்களுக்கு குடைகளும், விளையாட்டுப் பொருட்களும், வழங்கிவைக்கப்பட்டன. தமக்கு உதவுவதற்கு மன்வந்த சமூக சேவையாளர்களுக்கு அக்கிராமத்து மக்கள் இதன்போது நன்றி தெரிவித்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: