6 Aug 2019

மாற்றுத்திறனாளிகள் மாவட்ட விளையாட்டுவிழா மட்டகளப்பு வெபர் விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

SHARE
மாற்றுத்திறனாளிகள் மாவட்ட விளையாட்டுவிழா மட்டகளப்பு வெபர் விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

ஆரம்பகைத் தொழில் சமூகவலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டுதலில் சமூகசேவைத் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் திறன்களைம திப்பீடுசெய்யும் இவ்ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளின் மாவட்ட விளையாட்டுவிழா மட்டகளப்பு வெபர் விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை (03) இடம் பெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் நடைபெற்ற இந்தவிளையாட்டுவிழாவில் மாவட்டத்தின் 14 பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் இருந்துசுமார் 500 மாற்றுத்திறனாளிகள் பங்கு கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இங்கு வகைப்படுத்தப்பட்ட ஆண்,பென் மாற்றுத்திறனாளிகள் (ஓட்டநிகழ்வுகள், நீளம், உயரம் பாய்தல், குண்டு, பருதிவீசுதல், அஞ்சல் ஓட்டம், மற்றும் பாரம்பரிய பலவிளையாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.

இதில் மாவட்ட அரசாங்கஅதிபர் மாணிக்கம் உதயகுமார், பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு இப்போட்டிகளில் திறமைகாட்டியவர்களுக்கு திறமைச்சான்றிதங்களையும் சிறப்பு பரிசில்ளையும் வழங்கிவைத்தார். அத்துடன் இப்போட்டிநிகழ்வுகளில் கலந்து கொண்ட சகலமாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்புபரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

மாவட்ட போட்டிநிகழ்வுகளில் முதல் இடங்களைபெற்ற  இவ்ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகள் இவ்வாண்டின் தேசியவிளையாட்டு விழாவில் பங்கேற்கதகுதி பெற்றதாக மாவட்ட சமூகசேவை உத்தியோகஸ்தர் திருமதி. சந்திரகலா யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சனி முகுந்தன், மாவட்ட கணக்காளர் கே.கேதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்னியமூர்த்தி, பிரதேசசெயளாலர்கள் மற்றும் அரசசேவை பணியாளர்கள் மாற்றுத்திறனாளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எனபலரும் கலந்து சிறப்பித்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: