24 Jul 2019

அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு.

SHARE
அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு.
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்றதும் முர்த்தி தலம் தீர்த்தம் என்பன ஓருங்கொ அமையப்பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு ஆலய பிரதம குரு சௌந்தராஜ குருக்கள் தலைமையில் திங்கட்கிழமை (22) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது. திங்கட்கிழமை காலை முலமுர்த்திக்கு விஷேட பூஜைகள் இடம்பெற்றதை தொடர்ந்து கொடிஸ்தம்பத்திங்கு அருகில் மாமாங்கேஸ்வரர் எழுந்தருளி கொடிஸ்தம்பத்திற்கும் கொடிச்சீலைக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று அடியார்களின் அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள இவ்உற்சவத்தின் கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பு ஸ்ரீ.வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து  கொண்டுவரப்பட்டது. இவ்உற்சவத்தின் தேரத்திருவிழா 30.07.2019 அன்று காலை இடம் பெறவுள்ளதோடு, தீர்த்தோற்சவமானது 31.07.2019 அன்று நண்பகல் ஆலயதீர்த்தகேணியில் நடைபெறவுள்ளது. ஆடி அமாவாகை பிதிர்கடன் நிறைவேற்றும் பிரதான ஆலயங்களில் ஒன்றான மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் உற்சவத்திற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தினமும் முலவர் பூஜை யாக தம்ப பூஜை அபிசேகம்ஆகியவை இடம்பெற்று சுவாமி உள்வீதி வெளிவீதி வலம்வருதல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 












SHARE

Author: verified_user

0 Comments: