10 Jul 2019

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகள் காத்திரமான பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும். சற்குணராஜா நிகேஷ் - தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் வளவாளர்.

SHARE
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகள் காத்திரமான பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும்.
சற்குணராஜா நிகேஷ் - தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் வளவாளர்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகள் தங்களது காத்திரமான பங்களிப்புகளைச் செய்ய முன்வர வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் வளவாளர் சற்குணராஜா நிகேஷ் தெரிவித்தார்.

“இலங்கையில் கடந்த காலத்தைக் குணப்படுத்துவதனூடாக எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம், இளைஞர்களிடையே மீளிணக்கத்தைப் பலப்படுத்துவோம்”எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் இணைய அலுவலகத்தில்  புதன்கிழமை 10.07.2019 இடம்பெற்றது.

பாம் பெண்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாக்கத்தில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின்  ழுககiஉந கழச யேவழையெட ருnவைல யனெ சுநஉழnஉடையைவழைn நிதி அனுசரணையுடன்  இடம்பெற்ற இச் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் பல்வேறு சமூக மட்ட அமைப்புக்களில் இணைந்து செயற்பட்டு வரும் தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த  கிராம மட்ட தன்னார்வத் தொண்டர்களான இளைஞர் யுவதிகள் சுமார் 45 பேர் கலந்து கொண்டனர்.

அங்கு செயலமர்வை ஆரம்பித்து வைத்து தொடர்ந்து உரையாற்றிய நிகேஷ்  மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் மீளிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் எதிர்காலத் தலைவர்களான  இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு இன்றியமையாதது.

இளைஞர்களிடையே நல்லிணக்கம் ஏற்படாதவரை இந்த நாட்டில் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஒரு போதும் அடைந்து விட முடியாது.

பல்லின சமுதாயத்தினர் வாழும் இலங்கையில் மீளிணக்கத்தைப் பலப்படுத்தும் திட்டங்களை இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கத்துக்கான அமைச்சினூடாக நாடு முழுவதிலும் அமுல்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இத்தகைய கருத்தாடல்கள் நாடு முழுவதிலும் இடம்பெற்று வருகின்றன.

நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வழிசமைக்கும் செயற்பாடுகளில் இளைஞர் யுவதிகள் ஈடுபட வேண்டும்.

மூன்று தசாப்த கால ஆயுத வன்முறைகள் நாட்டு மக்களிடையே நிலவியிருந்த  நல்லிணக்கை சிதைத்து சின்னாபின்னப்படுத்தியுள்ளது.

தேசத்தின் வளங்கள் அழிந்து போனது ஒரு புறமிருக்க தேசத்தின் உயரிய வளங்களான மனித மனங்களிலும் அழிவுகள் ஏற்படுத்திய பாதிப்புக்கள் தடம்பதித்து நிற்கின்றன. எனவே கடந்த காலத்தைக் குணப்படுத்துவது எப்படிச் சாத்தியமாகும் என்பதைப் பற்றி பொறுப்புணர்வோடு சிந்தித்து முடிந்தவற்றை நல்லிணக்கத்துக்காகச் செய்ய வேண்டும்.

ஈடு செய்ய முடியாத இழப்புக்களைச் சந்தித்து சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மண்ணிலிருந்து நல்லிணக்கத்தைப் பற்றிப் பேச முடியுமா என்றால் அது சிரமமான விடயமாகினும் அது பற்றி சிந்தித்து நல்லிணக்கம்பற்றி பேசித்தான் ஆக வேண்டும். ஆனால் இது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதையும் புரிந்து கொண்டாக வேண்டும்.

தேசம் ரணங்களாலும் வடுக்களாலும் நிறைந்திருக்கிறது. ஆகையினால் பிளவுபட்ட சமுதாயத்தினரிடையேதான் நல்லிணக்கம் ஏற்பட பொருத்தமானதாகும்” என்றார்.
இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் இணையத்தின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.பி. பிரசன்யா பாம் பெண்டேஷன் வடிவேல் ரமேஸ் ஆனந்தன், அணித் தலைவி யசோதை துஷ்யந்தன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: