10 Jun 2019

யானை வேலியினை சீர்செய்து மின்சாரம் வழங்கி காட்டு யானைகளிடமிருந்து தமது உயிரை பாதுகாக்க உதவுமாறு உன்னிச்சை கிராம மக்கள் கோரிக்கை.

SHARE
யானை வேலியினை சீர்செய்து  மின்சாரம் வழங்கி  காட்டு யானைகளிடமிருந்து தமது  உயிரை பாதுகாக்க உதவுமாறு உன்னிச்சை கிராம மக்கள் கோரிக்கை.
மட்டக்களப்பு மேற்கே வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை கிராமத்தில் கடந்த பல மாதங்களாக காட்டுயானைகளின் தொலைலையால் அப் பிரதேச விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக அப்பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை(09) இரவு சில காட்டுயானைகள் வந்து தமது பயிர்களையும் பாதுகாப்பு வேலியினையும் சேதப்படுத்திச் சென்றதாக உன்னிச்சை மாவளையாறு கிராம விவசாயிகள் தெரிவித்தனர்.

உன்னிச்சை பிள்ளையாரடி இராசதுரைகிராமம் மாவளையாறு போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த காட்டுயானைகளின் அட்டகாசத்தால் பெரும் பாதிப்புக்களை நாளாந்தம் எதிர்நோக்கி வருகின்றனர். இப் பிரதேசத்தை அண்டிய காட்டோரத்தில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட யானை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தும் அதற்கு மின்சாரம் இல்லாத காரணத்தால் யானைகள் தங்கு தடையின்றி தமது விவசாய பயிர் நிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி அழித்து வருவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாம் மேற்கொண்ட  பயிர்களை யானை சேதப்படுத்துவதால் விளைச்சலுக்கு முன்னரே அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தமக்கு போதிய இலாபம் கிடைக்கவில்லை எனவும் அந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று மாலை 7மணியானால் எப்போது யானை வரும் என்ற அச்சத்தில்  கல்விகற்கும் தமது பிள்ளைகள் பயந்த நிலையில் தினமும் வாழ்ந்து  நிலையில் உள்ளதாகவும் இவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் அரச அதிகாரிகள் கவனம் செலுத்தி யானை வேலியினை சீர்செய்து அதற்கு மின்சாரம் வழங்கி இந்த காட்டு யானைகளிடமிருந்து தமது பயிரையும் உயிரையும் பாதுகாக்க உதவுமாறு அந்தப் பிரதேச மக்கள் கோரிநிக்கின்றனர்.








SHARE

Author: verified_user

0 Comments: