9 Jun 2019

ஏறாவூர் நகரத்தை அண்டிய தளவாய் மதுரங்குடா கிராமத்திற்குள் முதன் முறையாக காட்டுயானைகள் நுழைந்து துவம்சம்.

SHARE
ஏறாவூர் நகரத்தை அண்டிய தளவாய் மதுரங்குடா கிராமத்திற்குள் முதன் முறையாக காட்டுயானைகள் நுழைந்து துவம்சம்.
மட்டக்களப்பு – ஏறாவூர் நகரத்தை அண்டிய தளவாய் - மதுரங்குடா கிராமத்திற்குள் சனிக்கிழமை (08.06.2019) இரவு பிரவேசித்த காட்டுயானைகள் தென்னம் தோட்டங்களை துவம்சம் செய்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விதம் இப்பிரதேசத்திற்குள் காட்டு யானைகள் நுழைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை வேளை தென்னம் தோட்டங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் நூற்றுக்கணக்கான தென்னம் மரங்களை துவம்சம் செய்துள்ளன.

தென்னம் கன்றுகளின் குருத்துப் பகுதியை பிடுங்கி எடுத்து அவற்றை உண்டு விட்டு காட்டு யானைகள் சென்றுள்ளன.

இவ்வாறு குருத்துக்கள் பிடுங்கப்பட்ட தென்னங் கன்றுகள் பின்னர் வளரமுடியாமல் இறந்து போய் விடும்.

பற்குணசிங்கம் ஜெயகாந்தன், சரவணபவன் இராஜேஸ்வரன், யோகராசா லுவானந்தராசா ஆகியோருக்குச் சொந்தமான மூன்று தென்னந் தோட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





SHARE

Author: verified_user

0 Comments: