21 Jun 2019

போதை பொருள் தடுப்பு வாரம் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜுன் முதல் 1 ஆம் திகதி ஜுலை வரைக்கு நாடு முழுவதுமாக நடத்துவதற்கான ஏற்பாட்டினை அரசு மேற்கொண்டு வருகின்றது.

SHARE
போதை பொருள் தடுப்பு வாரம் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜுன் முதல் 1 ஆம் திகதி ஜுலை வரைக்கு நாடு முழுவதுமாக நடத்துவதற்கான ஏற்பாட்டினை அரசு மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்பு வாரத்திரனை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கான முன்னாயத்தங்களை அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரைக்கு அமைவாக வெள்ளிக்கிழமை 2.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட போதைதடுப்பு பிரிவினரும் அதனோடு இனைந்த திணைக்களங்களும் கலந்து கொண்டன இதில் மாவட்டசெயலகத்தினாலும் பிரதேச செயலகங்களினாலும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று விழிப்புனர்வுகளையும் பேரணிகளையும் துண்டுப் பிரசுரங்கள்மூலமாகவு மக்களை விழிப்படை செய்ய தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

 இவற்றிக்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர் அரசாங்க திணைக்களங்கள் மற்று மக்கள் செறிந்து கானப்படும் இடங்கள் போன்ற இடங்களை விசேடமாக வீடு வீடாகவும் சென்று விழிப்புணர்;வை ஏற்படுத்த தீர்மாணிக்கப்பட்டுள்ளது.


வீதி நாடகங்கள் விவாதப் போட்டிகள் ஆக்கப் போடிகள் சித்திரப் போட்டிகள் நடைபவணிகள் என பல்வேறுபட்ட நிகழ்சிகள் நடத்துவதுடன் போதை பொளுளை தடுப்பதற்கு சட்டங்களை வகுத்தலும் அமுல்ப்படுத்தலும் மது ஓழிப்பு நடவடிக்கையும் புணர்வாழ்வழித்தலும் எனற கருப்பொருளுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.









SHARE

Author: verified_user

0 Comments: