11 Jun 2019

ரணவிரு சேவாவின் 10வது ஆண்டு நிறைவும் கொடி வாரமும் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு

SHARE
ரணவிரு சேவாவின் 10வது ஆண்டு நிறைவும் கொடி வாரமும் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு.
ரணவிரு சேவாவின் 10வது ஆண்டு நிறைவும் கொடி வாரமும் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அதன் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் இணைப்பாளர் ரீ.எச். கீதிகா ஜயவர்தன தெரிவித்தார்.

திங்கட்கிழமை 10.06.2019 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் இணைப்பாளர் கீதிகா ஜயவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்த ஆரம்ப  நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் அவர்களுக்கு முதற்கொடி அணிவித்து கொடிவாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

அதனை தொடர்ந்து மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு கொடி அணிவிக்கப்பட்டது.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தாய் நாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரின் குடும்பங்களின் நலனோம்பு சேவையில் “ரணவிரு சேவா” அதிகார சபை ஈடுபட்டுள்ளது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள பயனாளிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களில் 39 குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலமைந்த வீடுகள் நிருமாணித்துக் கையளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இணைப்பாளர் ரீ.எச். கீதிகா ஜயவர்தன தெரிவித்தார்.

ரணவிரு குடும்பங்களின் சேவைகளை விஸ்தரிக்கும் நோக்கில் மேலும் தேவையுள்ள பயனாளிக் குடும்பங்களுக்கு வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கீதிகா தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: