8 May 2019

காத்தான்குடியில் மர அரிவு ஆலை தீக்கிரை சுமார் 73 இலட்ச ரூபாய் பெறுமதியான இயந்திராதிகள் மரத் தளவாடங்களுக்குச் சேதம்

SHARE
காத்தான்குடியில் மர அரிவு ஆலை தீக்கிரை சுமார் 73 இலட்ச ரூபாய் பெறுமதியான இயந்திராதிகள் மரத் தளவாடங்களுக்குச் சேதம்.
காத்தான்குடியில் அமைந்துள்ள மர அரிவு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தினால்  சுமார் 73 இலட்ச ரூபாய் பெறுமதியான இயந்திராதிகள் மரத் தளவாடங்களுக்குச் சேதம் ஏற்பட்டிருப்பதான முறைப்பாடு தமக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகாவீதியில் உள்ள மெட்ரோ மர அரிவு ஆலையில் புதன்கிழமை 08.05.2019 அதிகாலை 2.30 மணியளவில் இந்த தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதன் உரிமையாளர் முஹம்மத் ரஜீன் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மர அரிவு ஆலையில் தீ பரவுவதை அவதானித்த அங்கிருந்த காவலாளி இதுபற்றி அறிவித்ததும் விரைந்து செயற்பட்ட அதிகாரிகள் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை, மட்டக்களப்பு மாநகர சபை அத்தோடு காத்தான்குடி நகர சபை ஆகியவற்றிலிருந்து வந்து சேர்ந்த தீயணைப்பு பிரிவினர் தீ அயல் பகுதிகளுக்குப் பரவாமலும் மேலதிக சேதங்கள் விளையாமலும் பாதுகாத்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் பற்றி பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மர அரிவு ஆலையில் சுமார் 25 பேர் நேரடியாக தொழில்வாய்ப்பைப் பெற்றிருந்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: