5 May 2019

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தில் கார் வீதியில் இருந்த மரத்துடன் மோதுண்டு விபத்து.5 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வருகின்றார்கள்.

SHARE
மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தில் கார் வீதியில் இருந்த மரத்துடன் மோதுண்டு விபத்து.5 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வருகின்றார்கள்.
மட்டக்களப்பு-கல்முனை நெடுஞ்சாலை வீதியில் சனிக்கிழமை மாலை (04.5.2019) மாலை 4.00 மணியளவில்  இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ்  பொறுப்பதிகாரி சரத்சந்திர தெரிவித்தார்.

இவ்விபத்து சம்பவத்தினால் கல்முனையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினரே இவ்வாறு  வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு நகரில் உள்ள  உறவினர் ஒருவருடைய மரண வீட்டுக்குச் சென்று மரணச்சடங்கில் கலந்துகொண்டு  மீண்டும் தமது இருப்பிடமான கல்முனைக்கு காரில் திரும்பிக் கொண்டிருக்கும் போதே குறித்த நெடுஞ்சாலை வீதியில் ஓந்தாச்சிமடம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் பாதையை விட்டு விலகிச் சென்று மரத்துடன் மோதுண்டுள்ளது.

இவ்விபத்து சம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உபுல் குணவர்த்தன மற்றும் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சரச்சந்திர தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து சென்று காயப்பட்டவர்களை மீட்டெடுத்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதித்தார்கள். இவர்கள் 5 பேரும் மேலதிக சிசிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது. இவ்விபத்தினால் படுகாயமடைந்தவர்களில் கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

இச்சம்பவத்தில் கல்முனைச் சேர்ந்த சாரதியான நாகராசா(வயது72), மற்றும் மு.முகுந்தன்(வயது-20), சிவசக்தி(வயது-65), பொன்மணி(வயது-55), குமுதா(வயது-45) ஆகியோர்களே விபத்தில் காயமடைந்துள்ளார்கள். விபத்தில் சிக்குண்ட காரிணை பொலிசார் மீட்டெடுத்து பொலிஸ்நிலையத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து சம்பந்தமாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.





SHARE

Author: verified_user

0 Comments: