16 May 2019

ஏப்ரல் 21 இல் ஏற்பட்ட தற்கொலைக்கு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கு உளநல ஆற்றுப்படுத்தும் முகமாக தொண்டர்களைத் தயார்படுத்தும் பயிற்சிநெறி ஆரம்பம்.

SHARE
ஏப்ரல் 21 இல் ஏற்பட்ட தற்கொலைக்கு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கு உளநல ஆற்றுப்படுத்தும் முகமாக தொண்டர்களைத் தயார்படுத்தும் பயிற்சிநெறி ஆரம்பம்.
ஏப்ரல் 21 இல் ஏற்பட்ட தற்கொலைக்கு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கு உள ஆற்றுப்படுத்தும் முகமாக தொண்டர்களைத் தயார்படுத்தும் செயற்பாட்டின் கீழ் இலங்கைச் சொஞ்சிலுவைச் சங்கத்தின்  மட்டக்களப்புக் கிளையினால் தொண்டர்களுக்கு உள ஆற்றுப் படுத்தும் பயிறிசிநெறி ஒன்று வியாழக்கிழமை (16) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள கிறீன்கார்டன் விடுதியில் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் 30 தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உள நல வைத்திய நிபுணர் தன.கடம்பநாதன், மற்றும், உள நல பயிற்றுவிப்பாளர் பெலிசியன், ஆகியோர் கலந்து கொண்டு தொண்டர்களுக்கு உளநலம் தொடர்பான பயிற்சிகளையும், விளக்கங்களையும் வழங்கினர். இப்பயிற்சிநெறி வெள்ளிக்கிழமை(17) மாலையுடன் நிறைவுபெறவுள்ளதுடன், இப்பயிற்சிநெறியின முடிவில் காலந்து கொண்ட தொண்டர்களுக்கு சான்றிதழ்கழும் வழங்கப்படவுள்ளன.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிழ்வில் செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் வ.சக்திவேல், கிளைநிறைவேற்று உத்தியோகஸ்த்தர் வி.பிறேமகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இப்பயிற்சிநெறி முடிவுற்றதும், தொண்டர்கள் ஏப்ரல் 21 இல் ஏற்பட்ட தற்கொலைக்கு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடத்தில் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு உளநல ஆற்றுப்டுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா இதன்போது தெரிவிதார். 






















SHARE

Author: verified_user

0 Comments: