22 May 2019

விவசாயிகள் நஷ்டஈட்டை நம்பி விவசாயம் செய்யும் எண்ணம் இருக்கக்கூடாது, மட்டக்களப்புக்கு இழப்பீடாக 1 கோடி 90 இலட்சம் கிடைக்கப்பெற்றுள்ளது. கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி உதவிப் பணிப்பாளர் எம்.பாஸ்கரன்.

SHARE
விவசாயிகள் நஷ்டஈட்டை நம்பி விவசாயம் செய்யும் எண்ணம் இருக்கக்கூடாது, மட்டக்களப்புக்கு இழப்பீடாக 1 கோடி 90 இலட்சம் கிடைக்கப்பெற்றுள்ளது. கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி உதவிப் பணிப்பாளர் எம்.பாஸ்கரன்.
விவசாயிகள் நஷ்டஈட்டை நம்பி விவசாயம் செய்யும் எண்ணத்தைக் கொண்டிருக்கக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில், கமநல காப்புறுதி உதவிப் பணிப்பாளர் எம். பாஸ்கரன் தெரிவித்தார்.
படைப்புழு தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான சோளம் செய்கை விவாசாயிகளுக்காக வழங்கப்பட்டு வரும் இழப்பீடுகள் பற்றி அவர் செவ்வாய்க்கிழமை 21.05.2019 விவரம் தரும்போது இதனைக் குறிப்பிட்டார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், விண்ணையும் மண்ணையும் நம்பி விவசாயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எப்போதும் மன தைரியத்துடன் இருக்க வேண்டும்.

விவசாயச் செய்கையில் இயற்கை செயற்கை அழிவுகள் வருவது தவிர்க்க முடியாது. அதனையிட்டு விவசாயிகள் சோர்ந்து விடக் கூடாது. இழப்புக்களிலிருந்து மீண்டெழ வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருட பெரும்போகச் செய்கையில் ஏற்பட்ட படைப்புழுவின் தாக்கத்திற்கான இழப்பீட்டுக் கொடுப்பனவாக 613 விவசாயிகளுக்கு 19 மில்லியன் ரூபாய்  கிடைக்கப்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக சோளம் செய்கையில் படைப்புழு தாக்கத்தால் ஏற்பட்ட அழிவுக்கு இழப்பீட்டுகளை மிக விரைவாக வழங்க வேண்டுமென எமக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் நாம் இவ் வேலைத் திட்டத்தினை விரைவாகவும் நேர்த்தியாகவும் செய்துள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நூறுவீதம் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் அதற்குக் குறைவாக பாதிக்கப்பட்ட விவசாயிகளும் உள்ளனர். 

இந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 14 ஆயிரம் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டியுள்ளது இவர்களுக்கான வேலைகள் தற்போது நடைபெறுகின்றது,

அதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ் வேலைகள் ஆரம்பிக்கப்படும். எனவே இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நாட்டிலே ஏனைய விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்போல் இங்குள்ள விவசாயிகளுக்கும் கிடைக்கும்.

ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய்  நஷ்டஈடு என்ற வகையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது.

சோளம் செய்கையைப் பொறுத்தவரை ஒரு ஏக்கரில் ஏற்படும் நஷ்டத்தில் 15 சத வீதத்தை விவசாயிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் பொது நிபந்தனை அவ்வாறானால் ஒரு ஏக்கருக்கு 36,000 ரூபாதான் உச்சமாக வழங்கப்பட வேண்டும், ஆனால் கௌவ ஜனாதிபதியின் விஷேட அறிவிறுத்தலின் பிரகாரம் 100வீதம் அதாவது 40,000 ரூபா வழங்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரிவில் 173 விவசாயிகள் 77 ஏக்கரும், கரடியனாறு பிரிவில் 86 விவசாயிகள் 80 ஏக்கரும், கிரான் பிரிவில் 19 விவசாயிகள் 6ஏக்கரும் மண்டபத்தடி பிரிவில் 95 விவசாயிகள் 46 ஏக்கரும், தாந்தாமலை பிரிவில் 12 விவசாயிகள் 27 ஏக்கரும், வாகரை பிரிவில் 179 விவசாயிகள் 213 ஏக்கரும் வந்தாறுமூலை பிரிவில் 49 விவசாயிகள் 27 ஏக்கருக்குமாக 19 மில்லியன் ரூபா நஷ்டஈடாக வழங்கப்படுகின்றது. 

SHARE

Author: verified_user

0 Comments: