23 Apr 2019

மாவை சேனாதிராசா தலைமையிலான தமிழரசுக்கட்சியினர் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவடத்தின் பாதுகாப்பு நிலைப்பாடுகள், கேட்டறிதுள்ளனர்.

SHARE

மாவை சேனாதிராசா தலமையிலான தமிழரசுக்கட்சியினர் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவடத்தின் பாதுகாப்பு நிலைப்பாடுகள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பௌதீக தேவைகள், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் போன்றவற்றை மட்டக்களப்பு மாவட்ட செயலாளருடன் கேட்டறிந்தார்கள்.
இச்சந்திப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (23) நண்பகல் 12.30 மணியளவில் மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், பொன்.செல்வராசா, தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன், மற்றுமபலர் கலந்து கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரேதங்களை நல்லடக்கம் செய்வதற்கு பணம் முதற்கட்டமாக 60,000 முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு 25 பேருக்கு அவர்களின் குடும்பத்தாரின் கைகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிதியை முழுமையாக வழங்க தீர்மானித்துள்ளோம்.

மேலும் காயப்பட்டவர்களின் தேவையறிந்து அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் மனிதபிமான உதவிகளை செய்வதற்கும், நலனோம்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அரசார்பற்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயப்பட்டவர்களின் பெயர்பட்டியலை தயாரித்து காப்புறுதி செய்யப்பட்டவர்களுக்கு காப்புறுதி கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு  மாவட்டத்தில் திடீரென ஏற்படும் பல அனர்த்தங்களின் போது உயிரிழப்போரின் சடலங்களை முறையாக வைத்து பராமரிப்பதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நவீன வசதிகளுடன் கூடிய பிரேதயறையை கட்டுவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாராத்தின அவர்களுடன் நேரடியாக கதைத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நவீன வசதிகளுடன்கூடிய பிரேதயறையை அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவை சேனாதிராசா தெரிவித்தார். இப்பிரேதயறை மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தேவையறிந்தும், சுகாதார அமைச்சருடன் கதைத்து விஸ்தரிக்கவுள்ளோம் எனவும், போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் மேலும் இரு சட்ட வைத்திய அதிகாரிகளை நியமிப்பதற்கும் இவ்வாறான தகவல்களை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கு தெரியப்படுத்தியும், நாடாளுமன்றத்தில் இதற்கான முன்னாயர்த்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் எனத் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

பாடசாலைகளின் பாதுகாப்பு ,இரவில் விஷேட போக்குவரத்து சேவையை விஸ்தரித்தல், அரச திணைக்களின் பாதுகாப்பு, மாவட்டத்தின் தேவையறிந்து எரிபொருள் சேவையை முறையாக விஸ்தரித்தல், வர்த்தக சங்கத்துடன் கதைத்து கடைகளை பொதுமக்களின் அத்தியவசியமான பொருட்களை பெறுவதற்கு கடைகளை திறக்கச் செய்தல், இரவுநேர புகையிரச்சேவையை விஸ்தரித்தல், உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஆரம்பித்தல் போன்ற பல விடையங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டன. வைத்தியசாலைகளில் சிசிச்சை பெற்று வருகின்றவர்களின் நிலைப்பாடு, பாடசாலைகளின் பாதுகாப்பு, வணக்கஸ்தலங்களின் பாதுகாப்பு, இதன்போது விஷேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 




SHARE

Author: verified_user

0 Comments: