17 Apr 2019

துறைநீலாவணை கிராமத்தின் அபிவிருத்திக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் முயற்சியால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

SHARE
கம்பரெலிய வேலைத்திட்டத்தின் மூலம் துறைநீலாவணை மேற்கு வீதி புனரமைப்பதற்கு 20 இலட்சம் ரூபாவும், துறைநீலாவணை வடக்கு உள்ளூர் வீதிக்கு கொங்கிறீட் இடுவதற்கு 20 இலட்சம் ரூபாவும், துறைநீலாவணை மத்திய விளையாட்டு கழகத்திற்கு மைதானம் புனரமைப்பதற்கு 10 இலட்சம் ரூபாவும், துறைநீலாவணை தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் சுற்றுமதில் அமைப்பதற்கு 3 இலட்சம் ரூபாவும், மற்றும் துறைநீலாவணை மகாவித்தியாலயத்திற்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் 2 இலட்சமுமாக மொத்தம் 55 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
துறைநீலாவணைக் கிராமத்தில் கம்பரெலி வேலைத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட, அபிவிருத்தித் திட்டவேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (13) மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச சபை உறுப்பினர் க.சரவணமுத்து தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன், நொத்தாரிஸ் சா.சுந்தரலிங்கம், உதவிக்கல்வி பணிப்பாளர் சா.இராஜேந்திரன், பிள்ளையார் கோயில் தலைவர் த.கணேசமூர்த்தி, உட்பட பொதுமைக்கள் கலந்து கொண்டிருந்தனர். 




SHARE

Author: verified_user

0 Comments: