26 Apr 2019

உயிர்த்த நாயிறன்று படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு சகல வீடுகளிலும் தீபம் ஏற்றுமாறு வேண்டுகோள்.

SHARE
உயிர்த்த நாயிறன்று படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு சகல வீடுகளிலும் தீபம் ஏற்றுமாறு வேண்டுகோள்.
கடந்த உயிர்த்த நாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக எதிர்வரும் திங்கட்கிழமை (29.04.2019) அன்று மாலை 6.30 மணிக்கு மட்டக்களப்பிலுள்ள சகல இந்து ஆலங்களிலும், சகல கிறிஸ்த்தவ வேலாலயங்களிலும், மணி ஒலிக்கச் செய்து மாவட்டத்திலுள்ள அனைவரினது வீடுகளிலும் தீபமேற்றி அஞ்சலி செலுத்துமாறு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வெய்ஸ் ஒவ் மீடியா காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (26) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதன்போது தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன், அவ்வமைப்பின் உறுப்பினர்களான கே.வைத்தியலிங்கம், வ.கமலாதாஸ், த.கோபாலகிருஸ்ணன், எஸ்.நகுலேஸ்வரன், யோ.றொசாந், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அவ்வமைப்பின் தலைவர் க.மேகன் மேலும் தெரிவிக்கையில்… கடந்த 21 ஆம் திகதி எமது நாட்டையோ உலுக்கிய நாட்டின் அடிப்படைப் பொருளாதாரமே சிதறிப்போகும் அளவிற்கு, நாட்டையும் மக்களையும் சீர்குலைத்த நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவத்தால் நாட்டிலிருந்த அமைதியான சூழ்நிலை சீர்குலைந்துள்ளது. மக்களின் அடிப்படை வாழ்வாதாரமும் சீர்குலையும் அளவிற்கு அடிப்படை மதத் தீவிரவாதிகளால் நடாத்தப்பட்ட இந்த தாக்குதலை உணர்வுள்ள சகல மனிதநேயம் கொண்ட மனிதர்களும், மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

இந்சம்பவத்தில் உயிரிழந்த உறவுகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை மனிதநேயத்துடன் இனம் மதம் மொழி ஆகியவற்றைக் கடந்து, சகல இல்லங்களிலும், மாலை 6.30 மணியளவில், விளக்கேற்றி, சகல இந்து மற்றும் இறிஸ்த்தவ ஆலயங்களிலும் மணிகளை ஒலிக்கச் செய்து இந்நிகழ்வை அடையாளப்டுத்துமாறு மனிதாபிமானம் கொண்ட சகல உள்ளங்களையும் வேண்டுகின்றோம். நாங்கள் செய்யும் இந்நிகழ்வு, எதுவிதமான மத நோக்கமும் இல்லை.

அடிப்படை மதத் தீவிரவாதங்களை நாங்கள் எதிர்க்கின்றோம். மனித உரிமைகளை மதிக்கான எந்த சக்திகளினதும் செயற்பாடுகளை நாங்கள் எதிர்க்கின்றோம்.

இடம்பெற்ற குண்டுத்தாக்கதலின் பின்னர் ஒரு சில இடங்களில் சிற்சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருந்தன, அந்த வன்முறைகளுக்கு, சில முஸ்லிம் அமைப்புக்கள் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் மீது குற்றம் சுமத்தி குற்றம்சாட்டியிருந்தது. தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழ் உணர்வாகர்கள் அபை;பினால் அமைதிகாக்கப் படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறாவண்ணம் அமைதிகாத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுவரையில் நடந்த சிறு சிறு சம்பவங்களுக்கம், தமிழ் உணர்வாளர்கள் அமைப்புக்கும் எந்தவித சம்மந்தமும் கிடயாது. என அவர் தெரிவித்துள்ளார்.










SHARE

Author: verified_user

0 Comments: