17 Mar 2019

கிராமத்திற்கு தகவல் உரிமை மட்டக்களப்பில் நடமாடும் சேவை

SHARE
கிராமத்திற்கு தகவல் உரிமை மட்டக்களப்பில் நடமாடும் சேவை ஒன்று சனிக்கிழமை (16) மட்.சிவானந்தா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பு (AFRIEL எனும் தன்னார்வ அமைப்பின் ஏற்பட்டில் வெகுசன ஊடக அமைச்சு இந்த நடமாடும் சேவையை நடாத்தியிருந்தது.
இதன்போது வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் ரமணி குணவர்த்தன, மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் திருகோணமலை மாவட்ட கச்சேரிகளின் அரச உயர் அதிகாரிகள், கிழக்கு மாகாணசபையின் உயர் அதிகாரிகள், அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பின் (AFRIEL)பணிப்பாளர் ரவீந்திரடி சில்வா, மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 350 இகு மேற்பட்ட பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சட்டத்தரணிகள், வெகுசன ஊடக அமைச்சின் உயர் அதிகாரிகள், போராசிரியர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மக்களுக்கு தகவல் உரிமைச் சட்டம் தொடர்பில் விழக்கமளிக்கப்பட்டதுடன் மக்களின் கேள்விகளுக்கும் பதில் வழங்கினர்.

இந்நிகழ்வின் பின்னர் கலந்து கொண்ட மக்களில் பலர் தமது தேவைகள், தகவல்கள் குறித்து தகவல் பெறும் விண்ணப்பங்களைப் அவ்விடத்திலேயே பெற்றுக் கொண்டு சென்றதுடன், பலர் அவ்விண்ணப்பத்தை அவ்விடத்திலேயே பூர்தி செய்து இளைஞர் வலையமைப்பு (AFRIEL ஊடாக சம்மந்தப்பட்ட திணைக்களங்களிடம் சமர்ப்பிக்கும்படி வழங்கியிருந்தனர்.

































SHARE

Author: verified_user

0 Comments: