17 Feb 2019

வளமான விவசாயத்தின் மூலம் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் விவசாயக் கருத்தரங்கு.

SHARE
மட்டக்களப்பு சைவமங்கையர் கழாகமும், இந்து மகளீர் மன்றமும் மற்றும் லீயோ கழகமும் இணைந்து “வளமான விவசாயத்தின் மூலம் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் விவசாயக் கருத்தரங்கை சைவமங்கையர் கழகத்தின் தலைவரும், கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபருமான திருமதி. திலகவதி ஹரிதாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை (15) கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இந்துமகளிர் மன்ற உபதலைவர்களான திருமதி.கலா மகேந்திரராஜா, திருமதி. எம்.சீவரெட்ணம், விவசாய போதனாசிரியர் திருமதி.மதுமிதா தினேஷ், கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர், பேச்சியம்மன் ஆலய பரிபாலனசபை முகாமையாளர் நவசிவாயம் ஹரிதாஸ், மற்றும் எஸ்.சுதாகரன், லீயோ கழகத்தினர், சைவமங்கையர் கழகத்தினர், பயனாளிகள் கலந்து கொண்டார்கள்.

கே.ஓ.வீ.நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் பயிர்விதைகள், பழமரக்கன்றுகள் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது விவசாய போதனாசிரியர் திருமதி. மதுமிதா தினேஸ் அவர்கள் நகர்புற வீடுகளில் உள்ள குறுகிய நிலத்தில் எவ்வாறு வீட்டுத்தோட்டம் செய்வது, அதனை பராமரிப்பது,வீட்டில் கிடைக்கும் கழிவுகளை பயன்படுத்தி கூட்டுப்பசளை தயாரிப்பது எவ்வாறு?,நஞ்சற்ற மரக்கரி, கிழங்குவகைகள்,இலக்கரிச்செய்கை,பூக்கள் உற்பத்தி,தானிய உற்பத்தி,கிழக்குவகைகள்,உள்ளிட்ட விவசாய பயிர்ச்செய்கை எவ்வாறு மேற்கொள்ளுவது எவ்வாறு?,விவசாய திட்டமிடல் எவ்வாறு?,பற்றிய தெளிவூட்டல்களை பயனாளிகளுக்கு பல்லூடகத்திரை மூலம் தெரியப்படுத்தினார்.












SHARE

Author: verified_user

0 Comments: