10 Feb 2019

சீனாவின் 234 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நிருமாணப் பணிகள்

SHARE
சீனாவின் 234 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நிருமாணப் பணிகள்
சீன அரசாங்கத்தின் 234 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் மட்டக்களப்பு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில்   சுகாதார போஷனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன ஞாயிற்றுக்கிழமை 10.02.2019 அங்குரார்ப்பணம் செய்தார்.

இவ்வைத்தியசாலையில் நவீன வசதிகளைக் கொண்ட நோயாளர் விடுதி, மகப்பேற்று விடுதி, இரத்த வங்கி, சத்திரசிகிச்சைக் கூடம் ஆரம்ப சிகிச்சைப் பிரிவு என்பவை அடங்கலாக 3மாடிக் கட்டிடம் அமையப் பெறவுள்ளது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, சுகாதார போஷணை மற்றும்  சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் பைஸல் காஸிம், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைத் தலைவர் எம்.எஸ். சுபைர், மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உட்பட சுகாதார திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: