18 Dec 2018

இரவிலும் விழித்திருக்கும் படுவாங்கரை மக்கள்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள எல்லைப்புறக் கிராம மக்கள் காட்டு யானைகளின் அட்டகாசங்களினால் இரவு வேளையிலும் விடிய, விடிய விழித்திருக்கும் நிலமை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கலலை தெரிவிக்கின்றனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் படுவாங்கரைப் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் தலைதூக்கிய நிலையில் தற்போது இந்நிலமை உக்கிரமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாளாந்தம் இரவு வேளைகளில் காட்டு யானைகள் தனியகவும், கூட்டமாகவும், கிராமங்களுக்குள் உட்புகுந்து பயிரினங்களை அழித்து வருவது மாத்திரமல்லாது வீடுகளையும், தாக்கி அழித்து வருகின்றமை வேதனைக்குரிய விடையமாகும்.

இதுவரையில் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் 10 இற்கு மேற்பட்ட உயிர்கள் காட்டு யானைகளின் தாக்கத்தினால் காவு கொள்ளப்பட்டுள்ளன, பலர் காயடைந்தும், அங்கவீனர்களாகவும், உள்ள போதிலும், நூற்றுக்காணக்கான வீடுகளும், உடமைகளும், பல பயன்தரும் பயிரினங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது பெரும்போக வேளாண்மைச் செய்கையின் குடலைப் பருவமாகையால் அதிகளவு காட்டுயானைகள் ஒவ்வொரு இரவும் வயல்வெளிகளுக்குள்ளும், கிராமங்களுக்குள்ளும், புகுவதனால் மக்கள் நிதிரையின்றியும், நிம்மதியின்றியும், வாழ்ந்து வருவதாக அங்கலாய்க்கின்றனர்.

பலமுறை துறைசார்ந்தவர்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும், இந்நிலமை குறித்து தெழிவாக எடுத்துரைத்துள்ள போதிலும், இன்றுவரை இவற்றுகுரிய தீர்வு எட்டாக கனியாகவே அமைந்துள்ளதாக போரதீவுப்பற்றுப் பிரதேச மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு அப்பகுதி மக்கள் தினமும் காட்டு யானைகளினால் எதிர்கொண்டு வரும் நிலமை குறித்து அப்பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சுற்று வட்ட அதிகாரி ஏ.ஹலீமுடன் செவ்வாய்க்கிழமை (18) தொடர்பு கொண்டு கேட்டபோது….

போரதீவுப்பற்றுப் பிரதேசத்தல் தளவாய் எனும் இடத்தில் பாரிய காடு அமையப் பெற்றுள்ளது. அதில் யானைகள் தங்குவதற்குரிய வசதிகள் காணப்படுகின்றது. இவற்ழறவிட இப்பிரதேசத்தில் சுற்றிவர வயல் நிலங்கள் காணப்படுகின்றன, இதன் காரணமாகவும், யானைகள் உணவுக்காக இரவில் கிராமங்களுக்குள்ளும், வயல் வெளிகளுக்குள்ளும் ஊடுருவுகின்றன. பொலிசார், இராணுவத்தினர், மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன், 3 தடவைகள் இங்குள்ள யானைகளை துரத்திக் கொண்டு மின்சார வேலிக்கு அப்பால் விட்டு, விட்டு வந்துள்ளோம், மீண்டும், மீண்டும், யானைகள் மின்சார வேலிகளை உடைத்து விட்டு கிராமங்களுக்குள் உள் நுழைகின்றன. 

தளவாய் கட்டுக்குள் ஒவ்வொரு 100 மீற்றர் இடவெளிக்குள் பாதைகளையாவது அமைத்தால் அக்காட்டுக்குள் தங்கி நிற்கும் யானைகளைத் துரத்துவதற்கு இலகுவாக அமையும், அல்லது அக்காட்டை முன்றாக ஒதுக்கவேண்டும்.

பிரதேச செயலகங்கள் ஊடகவும், பொது அமைப்புக்கள் ஊடகவும் நாங்கள் யானைகளை விரட்டும் வெளிகளையும், வழங்கி வருகின்றோம், கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து விட்டது என எமக்கு பொதுமக்கள் தகவல் தந்தவுடன் அவ்விடத்திற்கு இரவு பகல் பாராது நாம் நேரடியாகச் சென்று யானைகளை துரத்தும் பயியிலும் ஈடுபட்டு வருகின்றோம் என அவர் தெரிவித்தார். 







SHARE

Author: verified_user

0 Comments: