31 Dec 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 நிறைவடையும்போது 4751 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிறேஸ் நவரட்ணராஜா

SHARE
2018 ஆம் ஆண்டு நிறைவடையும்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 4751 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக மட்டக்களப்புப்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிறேஸ் நவரட்ணராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட டெங்குப் பாதிப்பு நிலைமை தொடர்பாக திங்கட் கிழமை (31) தொடர்பு கொண்டு கேட்டபோது மேலும் விவரம் தெரிவித்த அவர்,  

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு அபாயம் குறித்து பரவலான, தொடர்ச்சியான விழிப்புணர்வுகள் பல மட்டங்களிலும் இடம்பெற்றுவருகின்றன.

அதேபோன்று 2019ஆம் ஆண்டிலும் டெங்கு அபாயம் குறித்த விழிப்புணர்வுகள் பல மட்டங்களிலும் இடம்பெறும் வகையில் நிகழ்ச்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
ஜனவரி, பெப்ரவரி, மார்ச் ஆகிய முதற் காலாண்டுப் பகுதியில் பருவமழை இருக்கக் கூடும் என்பதால் டெங்கு நுளம்புகளின் பெருக்கமும் உருவாகக் கூடிய வாய்ப்புள்ளது.

எனவே, இது குறித்து மக்கள் விழிப்பாக இருந்து தங்களது வீட்டையும் சூழலையும் பிரதேசத்தையும் நாட்டையும் டெங்குத் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பிரதேசம் எங்குமுள்ள சங்கங்களின், கிரா மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸார் ஆகியோரின் உதவியுடன் வீடுகள், திணைக்களங்கள் என்பனவற்றில் கிரமமாக வாராந்தம், மாதாந்தம் என டெங்கு உருவாகக் கூடிய சாத்தியமுள்ளதா என்பது பற்றிப் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து டெங்கு நுளம்புகளின் தாக்கம் இல்லாமலாக்கப்பட வேண்டுமாயின் நகர மக்கள், கிராம மக்கள் அலுவலர்கள் தொழிலாளர்கள் என அனைவரதும் ஒத்துழைப்புத் தேவை” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: