25 Nov 2018

இன வன்முறைகளைத் தடுக்கும் பொதுமக்களின் ஆலோசனைகள் அடங்கிய பிரஜைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியீடு

SHARE

இன வன்முறைகளைத் தடுக்கும் பொதுமக்களின் ஆலோசனைகள் அடங்கிய பிரஜைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி மாவட்டங்களின் சர்வமதப் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் திருகோணமலை உல்லாச விடுதியில் சனிக்கிழமை 24.11.2018 இந்த அறிக்கை ஆவண நூலாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
இவ்வாண்டு மார்ச் மாதம் கண்டி, திகன, தெல்தெனிய போன்ற பிரதேசங்களில் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக இடம்பெற்ற இன வன்முறைகள்  தொடர்பில் உண்மையைக் கண்டறியும் பிரஜைகள் ஆணைக்குழுவின் அறிக்கையுடன் இன வன்முறைகளைத் தடுக்கும் பொதுமக்களின் ஆலோசனைகளும் இவ் ஆவண அறிக்கை நூலில் அடங்கியுள்ளதாக கண்டி உண்மையைக் கண்டறியும் பிரஜைகள் ஆணைக்குழுவின் தலைவர் காமினி ஜயவீர தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் சமாதானத்திற்கும் சமூகக் கலந்துரையாடலுக்குமான நிகழ்ச்சித் திட்ட அலுவலர் செலினா கிறேமர்(Celina Cramer – Program Officer for Peacebuilding and Community Dialog) தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ், தேசிய சமாதானப் பேரவையின் கண்டி, திருகோணமல, மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர்களான ரேணுகா மாலியகொட, எம்.ஏ. சதுராணி ரஷிகா, இராசையா மனோகரன் உட்பட இன்னும் பல துறைசார்ந்த செயற்பாட்டாளர்களும் பல் சமயப் பெரியார்களும் சமூக நல செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: