25 Nov 2018

சோளன் பயிற் செய்கையில் படைப்புழுவினைக் கட்டுப்படுத்தல் விவசாயிகளுக்கு விழிப்பூட்டல் நிகழ்வு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தில் மறு வயற் பயிரான சோளம் பயிற் செய்கையில் தற்போது பெருமளவு சேதத்தை ஏற்படுத்தும், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குள் உள்நுளைந்த அன்நிய நாட்டு பீடையான படைப் புழுவின் தாக்கத்திலிருந்து உடனடியாக விவசாயிகளை மீட்டெடுக்கும் நோக்கிலும், விவசாயிகளின் பொருளாதாரம் பாதிப்படையாமல் பாதுகாக்கவும், படைப் பழுவின் தாக்கம் தொடர்பில் கள ஆய்வினுடானதும், நேரடி விளக்கத்துடனுமான விவசாயிகளுக்க்கான விழிப்பூட்டல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (24) மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
காஞ்சிரங்குடா விவசாயப் போதனாசிரியர் ப.சகாப்தன் ஏற்பாட்டில்  விவசாயத்திணைக்கள மட்டக்களப்பு மத்தி வலய விவசாயப் பிணிப்பாளர் எம்.எஸ்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராசா,  இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விளக்கங்களை வளங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் விவசாயப் போதனாசிரியர்கள், பாடவிதான உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு படைப்புழு சம்மந்தமான விளக்கங்களை வழங்கியதோடு, அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் விளக்கமளித்தனர்.

இந்நிகழ்லில் அப்பகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஏனைய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயனடைந்ததாக காஞ்சிரங்குடா விவசாயப் போதனாசிரியர் ப.சகாப்தன் தெரிவித்தார். 













SHARE

Author: verified_user

0 Comments: