7 Nov 2018

நகரசபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முன்மொழிவுகள்

SHARE
காத்தான்குடி நகரசபை நிருவாகம் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட தயாரிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.
இந்த வரவு செலவு திட்டத்திற்கான திட்ட முன்மொழிவுகளை நகர சபை உறுப்பினர்களிடம் நகரசபை நிருவாகம் கோரியிருந்தது.


அதற்கமைவாக காத்தான்குடி நகர சபையில் அங்கம் வகிக்கும் நான்கு உறுப்பினர்களதும் திட்ட முன்மொழிவுகள் திங்களன்று 05.11.2018 காத்தான்குடி நகரசபைத் தவிசாளரிடம் நல்லாட்சிக்கான தேசிய  முன்னணியின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர், எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமியால் கையளிக்கப்பட்டது.

இத்திட்ட முன்மொழிவில் நோய்த்தடுப்புச் சேவைகள், வடிகான்கள் மற்றும் வீதிகள் துப்பரவு செய்தல், மாதர் மற்றும் சிசு பரிபாலனம், சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டம், திண்மக் கழிவு சேகரிப்பு, வீதிகள், வடிகான்கள், மற்றும் பாலங்கள், தெருமின்விளக்குகள், நூலக அபிவித்தி, சன சமூக நிலையங்கள், பொதுப் பொழுது போக்கு வசதிகள், பொது உதவிகள், தொழில் முன்னிலை வழிகாட்டல்கள், சிறுவர் பாடசலைகள், சமூக ஒழுக்கத்தை கட்டியெழுப்புதல் மற்றும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தல், சுத்தமான குடிநீர் விநியோகம்,;, பிரதேச கலாசாரங்களைக் கட்டியெழுப்புதல் மற்றும் பாடசாலைக் கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக நலனோம்பல் ஆகிய பதினெட்டு தலைப்புக்களின் கீழான திட்ட முன்மொழிவுகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முன்வைத்துள்ளது.

அத்தோடு இத்திட்ட முன்மொழிவின் முன்னுரையில் 2019ம் ஆண்டிற்கான பாதீட்டினைத் தயாரிக்கும் போது பின்வரும் விடயங்களை கவனத்திற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

01. அபிவிருத்தியின் போது சமூக, பொருளாதார, சுற்றாடல், சுகாதார ரீதியாக நீடித்து நிலவக் கூடிய நிலமைகளின் மீது கவனஞ் செலுத்துதல்.

02. மிகத் தேவையுடையோர், அல்லது மிகத் தேவையுடைய விடயம் அல்லது மிகத் தேவையுடை இடம் என்பவற்றிற்கு முன்னுரிமையளித்தல்.
03. எல்லாப் பங்காண்மையாளர்களையும் ஈடுபடுத்தல்.

04. நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை மையப்படுத்திய முழுமையான திட்டத்தினையும் தயாரித்தல்.

05. ஏனைய பங்குதாரர்களுக்கு வேறுபாடுகளுக்கு அப்பால் இடமளித்தல்.

06. வளப்பயன்பாட்டை உச்சப்படுத்தல்.

07. வீண்விரயம், மோசடிகளை இல்லாதொழித்தல்.
ஆகிய விடயங்களை கவனத்திற் கொண்டு 2019ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கூடாக சிறந்த திட்டமிடல் ஒன்றினைத் தயாரிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: