28 Oct 2018

அரசாங்க தகவல் திணைக்களம் ஊடகவியலாளர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி வளப்படுதிவருகின்றது.

SHARE
அரசாங்க தகவல் திணைக்களத்தைப் பொறுத்தவரையில் பிரதேச ஊடகவியலாளர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி வளப்படுதிவருகின்றோம். செய்திகளை ஊடகவியலாளர்களிடமிருந்தே நாம் பெற்றுக் கொள்கின்றோம் எனவே ஊடகவியலாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் செய்திகள் உண்மைத்தன்மையாகவும், நம்பகத்தன்மையாகவும், ஆதார பூர்வமாகவும் இருக்கவேண்டும். இதனை வைத்துக் கொண்டுதான் மக்களும் அவர்களது வாழ்வையும் மேம்படுத்த வேண்டியுள்ளது.  
என தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நிர்மலி பிரியங்கணி குமாரகே தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பு கச்சேரியில் அமைந்துள்ள கேட்போர் கூட்டத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

தற்போது சட்டரீதியான வாய்ப்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஊடகவியலாளர்கள் சுத்தம் செய்த கண்ணாடியூடாகப் பார்க்கவேண்டும், அல்லது கண்ணாடிக்கு அப்பால் சென்று பார்த்து சரியான தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டும். பார்ப்பதும், கேட்பதும் மாத்திரமல்லாமல், அதையும் கடந்து உண்மையான சம்பவத்தை ஆராய்ந்து அவதானத்தைச் செலுத்த வேண்டும். 

ஒரு சம்பவத்தினை எதிர்கொள்ளும்போதுதான் தெரியும் இன்னுமொரு சாராரும் அதனை எவ்வாறு எதிர்கொண்டுள்ளார்கள் என்று. ஒவ்வாரு சந்தர்ப்பத்திலும் அனுபவத்தைப் பெற்றவர்கள் பார்ப்பது ஒருவிடையமாகவும், அனுபவத்தைப் பெறாமல் அதனை தொலைவிலிருந்து பார்ப்பவர்களின் பார்வை வித்தியாசமாக இருக்கும். இவற்றுக்கு மேலதிகமாக இவை இரண்டையும் கடந்து இன்னும் ஆழமாக உற்று நோக்கினால் இன்னுமொரு கருத்து அதனுள் பொதிந்திருக்கும்.

எனவே அரசாங்க தகவல் திணைக்களம் ஊடகவியலாளர்களிடம் எதிர்பார்ப்பதும என்னவெனில் மறைக்கப்பட்டுள்ள உண்மைகளை வெளிக் கொணரவேண்டும் என்பதுதான். இவற்றுக்காகத்தான் ஊடகவியலாளர்களுக்கு தகவல் அறியும் சட்டமூலத்தை தெழிவு படுத்தும் முகமாக 5 மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறான கருத்தரங்கு நடைபெற்று 6 வது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு நடாத்தப்படுகின்றது. உங்களது பயணத்தை முறையாக கொண்டு செல்வதற்கு சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள உரிமைதான் தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும். இதனைப் பெற்று மக்களுக்கு ஊடகவியலாளர்கள் சிறந்த சேவையாற்ற வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது தகவல் திணைக்களத்தின் பகுதிப் பொறுப்பாளர் திலகரெட்ண, மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி வ.ஜீவானந்தம், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சட்டத்தரணி முகமட் அஸாட் வளவாளராகக் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் விளக்கங்களை வளங்கினார்.







SHARE

Author: verified_user

0 Comments: