30 Oct 2018

வாசிப்பதனால் சமூகப் பண்புகள் மேம்படுகின்றன – தவிசாளர் யோகநாதன்

SHARE
களுதாவளை பொது நூலகம் தற்போது தரம் 3 இல் உள்ளது அதனை எனது பதவிக் காலத்தில் தரம் இரண்டுக்கு உயர்தும் பொறுப்பு  எனக்கு இருக்கின்றது. அதனை செய்யவேண்டும் என்பதை நான் உறுதியாகக் கூறிக் கொள்கின்றேன். மாணவர்களை சிறந்த முறையில் உருவாக்குவது, கால்வியை முன்னெடுத்துச் செல்வது, வாசிப்பதனால்தான். அதனால்தான் நமது அறிவு பெருகிக்கொண்டு செல்கின்றது. இதனூடாக தொழில் விருத்திகளைப் பெற்றுக் கொள்கின்றோம். 
தேண்டத், தோண்ட நீர் வருவதுபோல் வாசிப்பதனால் சமூகப் பண்புகள் மேம்படுகின்றன. எனவே அழியாச் செல்வமாகிய கல்வியை நாம் அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்  என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைச் செயலாளர் ஞானமுத்து யோகநாதன் தெரிவித்துள்ளார்.

களுதாவளை பொது நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து நடாத்திய ஓவியக் கண்காட்சியும், “விழுமின்” எனும் சஞ்சிகை வெளியீட்டு விழாவும் திங்கட்கிழமை (29) களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

வாசகர் வட்டத் தலைவர் சு.சிவரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள், மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச சபைச் செயலாளர் க.லெட்சுமிகாந்தன்,  நூலகர் எம்.சி.ஹரிஷா சமீம், பிரதேச சபை உறுப்பினர் திருமதி.நிவேதிதா சந்திரலிங்கம், மற்றும், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இலக்கியவாதிகள், வாசகர்வட்ட உறுப்பினர்கள், என பலர் இதன்போது கலந்து கொண்டனர்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த தவிசாளர்….

வாசிப்பதன் மூலம் எமது சமூகத்தை வளர்த்தெடுக்க வேண்டும், எமது முன்னோர்கள் இவ்விடத்தில் இதன் அத்திவாரமாகத்தான் இந்த நூலகத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்கள். தவிசாளராகிய எனக்கு இப்பிரதோசத்திற்குட்பட்ட நூலகங்களை அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது.  

வாசிப்பின் மூலம்தான் உலகெங்கும் எமது தமிழினத் வியாபித்திருக்கின்றது. பல மொழிகளைக் கற்று பல பதவி எமது தமிழ் மக்கள் உலகமெங்கும் வாழ்ந்து வருகின்றார்கள். எனவே எமது மாணவர்கள் எமது கல்விமான்களைப்போல் முன்னேற வேண்டும், அதற்காக வேண்டி தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
























SHARE

Author: verified_user

0 Comments: