23 May 2018

வருமானமின்மையால் மிளகாய் செடிகள் பிடுங்கி அழிப்பு.

SHARE
மிளகாய் செய்கையில் தாம் பெரும் நஷ்ட்டத்தை எதிர் கொண்டுள்ளதால் அதனை ஈடு செய்ய முடியாமல் தாம் செய்து வந்த தொழிலை இடைநடுவில் கைவிட்டு விட்டுள்ளதாக களுதாவளைப் பிரதேச மிளகாய் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ழக்கு மாகாணத்தில் மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக்குப் பெயர்போன பகுதியான மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள களுதாவளைப் பிரதேசமாகும். களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேத்தாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், மகிழூர், போன்ற பல கிராமங்களில் அங்குள் மக்கள் கடற்கரை மணலில் போராடி உழைத்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மிளகாய்க்கு சந்தையில் நியாய விலை கிடைக்காததினால் அப்பகுதி விவசாயிகள் வருமானத்தை இழந்த நிலையில் இதனால் ஏற்பட்டுள்ள நஷ்ட்டத்தை ஈடுசெய்ய முடியாத அளவிற்கு பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர். மேலும் மிளகாய்ச் செடிகளுக்கும் இவ்வருடம் பலவிதமான பீடைத் தாக்கங்களும் அதிகரித்துள்ளதனாலும் மிளகாய் செடிகள் காய்க்கும் வீதமும் வெகுவாகக் குறைந்துள்ளாhக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே தாம் தொடர்ந்து செய்து வந்த இந்த மிளகாய்ச் செய்கையிலிருந்து இலாபம் ஈட்டு முடியாதுள்ளது. இதனை இடையில் விட்டு விட்டு மிளகாய் செடிகளை பிடுங்கி அழித்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் தமது ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் புதன் கிழமை (23.05.2018)  மரக்கறிகளுக்கான மொத்த விலையைப் பார்க்குமிடத்து, மிளகாய் 70 ரூபாவும், வெற்றிலை 80 ரூபாவும், நீலக்கத்தரிக்காய் 95 ரூபாவும், சின்ன வெங்காயம் 100 ரூபாவும், வெள்ளைக்கத்தரிக்காய் 75 ரூபாவும், பயற்றங்காய் 100 ரூபாவும், புடலங்காய் 80 ரூபாவும்,  வெண்டக்காய் 85 ரூபாவும், பாகற்காய்  200 ரூபாவுமாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


SHARE

Author: verified_user

0 Comments: