4 Oct 2016

காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மனோபலத்தையும் வளத்தையும் கொண்டு அடுத்த நகர்வு இடம்பெறவேண்டும். சிரேஷ்ட உள நல வைத்திய நிபுணர் ரீ. கடம்பநாதன்.

SHARE
“தங்களது சொந்த உறவுகளைப்; பறிகொடுத்து விட்டு அந்த வலிகளோடு துவண்டுபோய் சொல்லொண்ணாத் துயரம் நிறைந்த
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின்  மனோபலத்தின் வலிமை பிரமிக்க வைக்கின்றது.

இவர்களுக்காக மேற்கொள்ளப்படக் கூடிய அடுத்த நகர்வு அவர்களிடமுள்ள மனோபலத்தை அடியொற்றியதாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது அவர்களை மேலும் வலுப்படுத்தக் கூடியதாக இருக்கும்” இவ்வாறு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட உள நல வைத்திய நிபுணர் ரீ. கடம்பநாதன் (ளுநnழைச Pளலஉhயைவசளைவ ஊழளெரடவயவெ ) தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் திங்களன்று (ஒக்ரோபெர் 03, 2016) இடம்பெற்ற காணாமலாக்கப்பட்டோரில்; தங்கி வாழ்ந்த உறவினர்களுக்கு உளநல ஆலோசனை வழங்கும் நிகழ்வில் நிபுணத்துவ ஆலோசகராக கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த கால யுத்த சூழ்நிலைகளின் போது உன்னிச்சை, ஆயித்தியமலை, கரவெட்டியாறு, கரடிப்பூவல், இராஜதுரை நகர், பாவற்கொடிச்சேனை, நாவற்காடு, மகிழவெட்டுவான்  உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட சுமார் 35 இற்கு மேற்பட்டோரின் உறவினர்கள் இந்த உளநல ஆற்றுப்படுத்தல் ஆலோசனைக் கருத்துப் பகிர்வில் கலந்து கொண்டார்கள்.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் (நுயளவநசn ளுழஉயைட னுநஎநடழிஅநவெ குழரனெயவழைn) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த உளநல ஆலோசனை கருத்துப் பகிர்வை ஏற்பாடு செய்திருந்தது.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த உளநல வைத்திய நிபுணர் கடம்பநாதன்@
காணாமலாக்கப்பட்டவர்களுடைய உறவுகளின் உணர்வுகள், சிந்தனைகள், எதிர்பார்ப்புக்கள், ஏமாற்றங்கள், ஆதங்கங்கள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களைப்பற்றி உங்களுடன் கலந்துரையாடக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.
அதனை உற்றுக் கவனித்தால் இந்த எஞ்சியிருக்கும் உறவுகளான நீங்கள் பல்வேறுபட்ட வலிகள், பிரச்சினைகளின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இது உங்களது வாழ்க்கைக்கு ஒரு சவாலான விடயமாகவே தோன்றுகின்றது.
தங்களது சொந்த உறவுகளைப்; பறிகொடுத்து விட்டு அந்த வலிகளோடு துவண்டுபோய் சொல்லொண்ணாத் துயரம் நிறைந்த வாழ்க்கையை இன்னமும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

இது உங்களுடைய மனோபலத்தின் வலிமையை எண்ணி பிரமிக்க வைக்கின்றது” என்றார்

இதுபற்றி மேலும் தெரிவித்த அவர்@ இவர்களுக்காக மேற்கொள்ளப்படக் கூடிய அடுத்த நகர்வு அவர்களிடமுள்ள மனோபலத்தை அடியொற்றியதாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது அவர்களை மேலும் வலுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

பாதிக்கப்பட்ட மக்களிடையே தொடர்ச்சியாக நாங்கள் அவர்களுடைய பிரச்சினைகளையும் எதிர்மறையான உணர்வுகளையும் கதைத்துக் கொண்டிருப்பது அவர்கள் இருக்கின்ற நிலையிலிருந்து அவர்களைப் பலவீனப்படுத்தக் கூடியதாகவும் அமையும்.

பாதிக்கப்பட்டவர்களின் உணர்ச்சிகளை கிளறி விடுவது அவர்களது உடல் உள நலத்துக்கும் ஆரோக்கியமானதாக இருக்காது.
அந்தக் கட்டத்துக்கு அடுத்ததாக நாங்கள் மிகக் கவனமாக அவர்களை நகர்த்த வேண்டியுள்ளது.

அவர்களிடையே இயல்பாக உள்ள பலங்கள் மற்றும் வளங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு எதிர்காலத்தை அவர்கள் எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பது தொடர்பாக கூடுதலாக அதற்குத் தேவையான அனுசரணைகளை வழங்க ஒட்டு மொத்த சமூகமும் முன்வர வேண்டும்.” என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எல். புஹாரி முஹம்மத், காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமலநாயகி அமலராஜ் உட்பட பயனாளிகளான காணாமலாக்கப்பட்ட  உறவுகளின் குடும்பத்தவர்களும் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: