2 Oct 2016

தனுஷ்கோடி கடல்பிராந்தியத்தில் கரை ஒதுங்கிய ராட்சத மரம்: சுங்கத்துறையினர் தீவிர விசாரணை

SHARE
தனுஷ்கோடி   அருகே ஒ.ன்றாம் மணல் தீடையில்  ராட்சத மரம் கரை ஒதுங்கியது  குறித்து சுங்கத்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி  அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் பகுதி  மீனவர்களிள்  ஒன்றாம் மணல் தீடையில்   மர்மான முறையில் படகு கரை  ஒதுங்கியுள்ளதாக சுங்கத்துறையினருக்கு  தகவல் கொடுத்தனர் இதனையடுத்து சுங்கத்துறையினர்  சம்பவ இடத்திற்க்குச் சென்றனர்   .இதனையடுத்து அங்கு ராட்சத மர உருளை கரை ஓதுங்கியது கன்டுபிடிக்கப்பட்டது  பின் மரத்தை    கரைக்கு கொன்டுவர முயறச்சித்தனர் காற்றின்வேகம் அதிகரித்ததால்  அதனை அரிச்சல்முனை கடல் பகுதிக்குகொன்டுவந்து சேர்த்தனர்.


பின்  இன்று மாலை ராமேஸ்வரம் அலுவலகத்திற்க்கு கொன்டு வந்தனர் கைப்பற்றப்பட்ட மரம் தேக்குவகையை சார்ந்தது இது  சுமார் 18   நிளமும் 3 அடி விட்டமும் கொன்ட உருளை சுமார்  இரண்டு டன் எடைகொன்டதாக இருக்கும் என அதிகாரிகள்  தகவல் தெரிவித்துள்ளனர்  கரை ஒதுங்கிய  தேக்குமரத்தை செம்மரக்கட்டை என போலீயாக கூறி  இலங்கைக்கு கடத்தி சென்ற போது தவறிவிழுந்திருக்கலாம் என்ற கோனத்திலும் அதிகாரிகள்  விசாரைண நடத்தி வருகின்றனர் மேலும் இதன் மதிப்பு குறித்து முறையான ஆய்வுக்குப்பின் தான் கூற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: