25 Sept 2016

துறைநீலாவணை பிரதானவீதியை புனரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

SHARE
(துறையூர் தாஸன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு எல்லைக் கிரமமான துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதானபாதை கடந்த மூப்பது வருடகாலமாக புனரமைக்கப்படாது குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது. பழம்பெரும் கிராமமானது றைநீலாவணைக் கிராமம் அரசியல் வாதிகளினாலும் அதிகாரிகளினாலும் அபிவிருத்தியில் காலகாலமாக புறக்கணிக்கப்பட்டகிரமமாக இருந்து வருகின்றது.

தமிழ்த் தேசியத்துக்காக அர்ப்பணிப்புடன் நாட்டுப்பற்றாளர்கள் பலரைக் கொண்ட கிரமமாக துறைநீலாவணைக் கிராமம் இருந்துவருகிறது. இக்கிராமத்தில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள அனைத்துவீதிகளும் செப்பனிடப்படாது குன்றும் குழியுமாகவே காட்சியளிக்கின்றது. பெரியநீலாவணையில் இருந்து துறைநீலாவணைக் கிராமத்திற்கு செல்லும் பாதையில் குறிப்பாகதுறைநீலாவணை மத்திய மகாவித்தியாலயத்திலிருந்து கண்ணகி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் பிரதான பாதை சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. இவ்வீதியால் தினமும் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்களும் அரச உத்தியோகஸ்தர்களும் பொதுமக்களும் பயணம் செய்துவருகின்றனர்.

கரடு முரடான இவ் வீதியால் பயணித்து மக்கள் இடறி விழுந்து விபத்துக்குள்ளாகிய சந்தர்ப்பங்கள் எண்ணிலடங்காதவை. துறைநீலாவணை கிராமத்தைச் சேர்ந்தபலர் அரச பணிகளில் உயர் மட்ட பதவிகளை அலங்கரிக்கின்றனர். 

குறிப்பாக பொறியியலாளராக உதவிபிரதேச செயலாளர்களாக கிராம நிலதாரிகளாக திட்டமிடல் பணிப்பாளர்களாக வைத்தியர்களாக வலயக் கல்வி அலுவலர்களாக கணக்காளராக என பல்வேறு நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில்துறை நீலாவணைக் கிராமத்தின் அவலநிலை தொடர்பாக பாராமுகமாக உயர் அதிகாரிகள் யாவரும் செயற்பட்டு வருகின்றனர்.

நீண்டகாலமாக அபிவிருத்தியின்றி கிடக்கும் பழம் பெரும் கிரமமான துறைநீலாவணைக் கிராமத்தின் அபிவிருத்திசார் பணிகளுக்கு உதவுமாறு பொதுமக்கள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கோரிக்கை விடுக்கின்றனர்.




SHARE

Author: verified_user

0 Comments: