கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை வரலாற்றில் முதலாவது சுற்றுலாத்துறை பணியகமும், பணிப்பாளர் சபையும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை
அமைச்சரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று 16.08.2016 மாலை 5 மணிவரை இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அனைத்து சுற்றுலாத்துறை ஹோட்டல்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இப்பணிப்பாளர் சபையின் தேர்வு இடம்பெற்றது.
இப்பணிப்பாளர் சபையின் தலைவராக சுற்றுலாத்துறை தவிசாளர் சரத் சந்திர மோட்டி, பொதுமுகாமையாளராக விவசாய அமைச்சின் திட்டமிடல் பணிபாளர் டாக்டர் ஆர்.ஞான சேகர் மற்றும் உறுப்பினர்களாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் லலித் ஏ.ஜயசிங்க, மீனாட்சி சுந்தரம், முகம்மட் ஹனீபா சேகூ இஸ்மாயில், ஏ.எம்.ஜெளபர் ஆகியோர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட இப்பணிப்பாளர் சபையானது தொடர்சியாக மூன்று வருடங்களுக்கு இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment