3 Aug 2016

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு தகவலறியும் சட்டமூலம் தொடர்பான பயிற்சி

SHARE
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு தகவலறியும் சட்டமூலம் தொடர்பான பயிற்சி
நெறி ஒன்று செவ்வாய்க் கிழமை (02) மட்டக்களப்பில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எல்.தேவதிரன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொஸ் ஒவ் மீடியா கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாணத்திலுள்ள 30 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தகவல் அறியும் உரிமைச் சட்டம், தகவல் பொறும் உரிமை, தகவல் அலுவலர்கள் நியமனம் மற்றும் தகவலை பெறுவதற்கான நடைமுறை, தகவல் மறுக்கப்பட்டதற்கு எதிரான மேன்முறையீடுகள், எந்த வகையில் தகவல் அளிக்கப்பட வேண்டும் போன்ற பல விடையங்கள் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இலங்கையைப் பிறப்பிடமாகவும், தற்போது அவுஸ்ரேலியாவில் வசிப்பவருமான சிரேஸ்ட ஊடகவியலாளரும், சர்வதேச சட்டத்தரணியுமான சந்திரிகா சுப்ரமண்யன் இதன்போது வளவாளராககக் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கினார்









SHARE

Author: verified_user

0 Comments: