முன்பிள்ளைப் பராய பராமரிப்பு நிலைய வளவுக்குள் நின்றிருந்த பாரிய பாலை மரமொன்றில் வெள்ளிக்கிழமை இரவு (ஓகஸ்ட் 19, 2016) பற்றிக் கொண்ட தீ சனிக்கிழமை (ஓகஸ்ட் 20, 2016) காலை 8.30 மணியளவில் அணைக்கப்பட்டு விட்டதாக அனுராதபுரம் தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.
அனுராதபுரம் மேற்கு சர்வோதய நிலைய அமைவிடத்துக்குள் அமைந்துள்ள முன்பிள்ளைப் பராய பராமரிப்பு நிலைய வளவுக்குள் நின்றிருந்த பாலை மரத்திலேயே இந்த தீ பற்றிக் கொண்டது.
கருகிப்போன புல் மற்றும் சருகுகளில் மூண்ட தீயே பாலைமரத்தில் பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றி உடனடியாக தீயணைப்புப் படையினருக்கு அறிவித்ததும் ஸ்தலத்திற்கு விரைந்த நீர்த்தாரை பீச்சி தீயை அணைத்தனர்.
தீ மேலும் பரவியிருந்தால் அருகிலுள்ள சர்வோதய நிலையக் கட்டிடங்களுக்கும் அதிக சேதம் ஏற்பட்டிருக்கும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment