24 Jun 2016

கொக்கட்டிச்சோலையில் போசாக்கு விழிப்புணர்வு ஊர்வலம்

SHARE
தேசிய போசாக்கு மாதத்தினை சிறப்பித்து மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் பட்டிப்பளைச் சந்தியில் இருந்து மகிழடித்தீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வரை "அழகான உடலமைப்பிற்கு அளவோடு
உண்ணுங்கள்" எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம்  புதன்கிழமை நடைபெற்றது. 
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிறந்த உணவுப்பழக்க வழக்கம் உடல் அழகிற்கு பொருத்தமானது, அழகான உடலமைப்பிற்கு அளவோடு உண்ணுங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் மரக்கறி வகையான உணவுகளையும் கையிலேந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் ஊர்வலம் வைத்திய அதிகாரி அலுவலகத்தை சென்றடைந்ததும் கலந்து கொண்டவர்களுக்கு இலைக்கஞ்சி, பயற்றம் பருப்பு, அவியல் போன்ற உணவுகளும் வழங்கப்பட்டது. மண்முனை தென்மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், வேல்ட்விஷன் நிறுவனத்துடன் இணைந்து குறித்த ஊர்வலத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

இதன்போது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர்.எஸ்.சண்முகநாதன், வேள்ட்விஸன் நிறுவன கிழக்கு பிராந்திய சுகாதார திட்ட இணைப்பாளர்.பி.லோகிதராசா, வேள்ட்விஸன் பட்டிப்பளைப்பிராந்திய அபிவிருத்தி திட்ட முகாமையாளர் இ.மைக்கல், செயலக உத்தியோகத்தர்கள், வைத்திய அதிகாரி, அலுவலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: