26 May 2016

வறிய மாணவர்களுக்கு புலமைப் பரிசில்

SHARE
(க.விஜி) 

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியின் வில்லியம் ஓல்ட் நம்பிக்கை நிதியத்தினால் கல்வி  பொதுத்தர உயர் தரத்தில் கற்கும் வறிய நிலையிலுள்ள  12 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பணவு
வழங்கிவைக்கப்பட்டது. மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் புதன்கிழமை (25) காட்மண்ட் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வில்லியம் ஓல்ட் நம்பிக்கை நிதியத்தின் தலைவரும், கிழக்குபல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி பீ.இளங்கோ,சென்றலைட் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய பிரதிபொதுமுகாமையாளருமான வை.கோபிநாத்,மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழையமாணவ சங்கத்தலைவர் எஸ்.சசிகரன், பிரதிஅதிபர் இராசதுரை பாஸ்கரன்,நம்பிக்கை நிதியத்தின் செயலாளரும், ஆசிரியருமான கு.சுபாகாந்தன்,உட்பட  ஆசிரியகள், பெற்றோர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட
கல்வி  பொதுத்தர உயர் தரத்தில் கற்கும் வறிய நிலையிலுள்ள  12 மாணவர்களுக்கும்  அவர்களது உயர்தரக் கல்வி முடியும்வரை மாதாந்தம் தலா 1500 ரூபா வீதம் இந்நிதியத்தினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.










SHARE

Author: verified_user

0 Comments: