8 May 2016

தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தினை மட்டக்களப்பு ஆலங்குளம் கிராமிய நீர் வழங்கல் திட்டம் தட்டிக்கொண்டது.

SHARE
(எம்.எஸ்.எம்.சறூக்)

உலக நீர் தினம் 1993 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ம் திகதி குறித்ததொரு தொனிப் பொருளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இலங்கையிலும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் வழிகாட்டலில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஏற்பாட்டில் அண்மையில் மிகச்சிறப்பாக இடம் பெற்றது.

இந்த உலக நீர் தினத்தினை முன்னிட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது தேசிய ரீதியாக பல்வேறு போட்டிகளை ஒழுங்கு செய்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதியான சான்றிதலும் பணப்பரிசில்களையும் வழங்கி வருகின்றது. அதாவது அதன் நிருவாகக் கட்டமைப்புக்குள்ளேயே சிறந்த பிராந்திய முகாமையாளர் அலுவலகம் இசிறந்தநீர் சுத்திகரிக்கும் நிலையம், சிறந்த சமூக முகாமைத்துவ கிராமிய நீர் வழங்கல் திட்டம்… போன்றவைகளுக்கிடையே தேசிய மட்ட போட்டிகளை நடாத்தி அதில் 1ம், 2ம், 3ம், இடங்களை பெறுபவர்களுக்கு பெறுமதியான சான்றிதலும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்கீழ் பல பிரிவுகள் செயற்பட்டு வருகின்றன அவைகளில் கிராமிய நீர் வழங்கல் பிரிவும் ஒன்றாகும் இதன்கீழ் இலங்கையில் 4500 இற்கு மேற்பட்ட சமூகசார் அமைப்பினால் முகாமைத்துவம் செய்யப்பட்டுவரும் கிராமிய நீர் வழங்கல் திட்டங்கள் உள்ளன. 


ஓவ்வொரு ஆண்டும் உலக நீர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப படுகின்ற மேற்குறிப்பிட்ட பல்வேறு போட்டிகளில் சமூக சார் அடிப்படை அமைப்புக்களினால் முகாமைத்துவம் செய்யப்படும் கிராமிய நீர் வழங்கல் திட்டங்களுக்கு இடையிலான இவ்வாண்டுக்குரிய தேசிய மட்ட போட்டியில் 3 ஆம் இடத்தினைதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பிராந்திய முகாமையாளர் அலுவலகம் மட்டக்களப்பு மாவட்ட கிராமிய நீர் மற்றும் சுகாதார பிரிவின் கீpழ் உள்ள கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆலங்குளம் சனசமூக நிலையத்தினால் முகாமைத்துவம் செய்யப்பட்டு வரும் ஆலங்குளம் கிராமிய நீர் வழங்கல் திட்டத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. 

அதற்கான பெறுமதியான சான்றிதலும் பணப்பரிசும் அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 2016 உலக நீர் தின நிகழ்வின்போது வழங்கி வைக்கப்பட்டன.

ஆலங்குளம் கிராமமானது கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயளாளர் பிரிவில்; உள்ள ஒரு கிராமமாகும். இது நாவலடி சந்தியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் மட்டக்களப்பு பொலன்னறுவை வீதியின் வடக்கே அமைந்துள்ளது.
இக்கிராமிய நீர் வழங்கல் திட்டத்தின் அம்சங்களை சுருக்கமாக பின்வருமாறு குறிப்பிடலாம்.

நீர் முலம் - 02 கிணறுகள், நீர்த்தாங்கி -1, இதன் கொள்ளளவு 60,000 லீற்றர்
பம்பி – 2, குளோறினேற்றர் -1 அலுவலகம் மற்றும் களஞ்சியசாலை போன்றன உள்ளன.

கிராமிய நீர் வழங்கல் திட்டங்கள் பொதுவாக அதற்கென தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தினாலேயே முகாமைத்துவம் செய்யப்பட்டு வருவதனால் குறிப்பிட்ட அமைப்பிற்கு தமது திட்டத்தினை வெற்றிகரமான முறையில் நிலைத்து நிற்கும் அடிப்படையில் முன்கொண்டு செல்லத்தேவையான அனைத்து வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சிகள் என்பன வழங்கப்படுகின்றன.

ஆலங்குளம் சனசமூக நிலையமானது தமது கிராமத்து மக்களுக்கான சுத்தமான நீரினை தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்களும் வழங்குவதுடன் அவ்வப்போது ஏற்படும் உடைவுகள் திருத்தல்களை உடனடியாக இனம் கண்டு திருத்தம் செய்தல் மேலும் பாவனையாளர்களின் விபரங்கள், நீர் இணைப்பு அவணங்கள், நீர் கட்டன பட்டியல் தயாரிப்பு அதன் விநீயோகக்கட்டனம் அறவிடுதல் போன்ற செயற்பாடுளை உரிய வேளையில் மேற்கொள்ளுதல், வெளிப்படையான கணக்கறிக்கைகள், கூட்டறிக்கைகள் போன்றன இந்த அமைப்பின் வெற்றிக்கான பின்னனியாக உள்ளன. அத்துடன் சமூகசார் அமைப்பின் அர்ப்;;பணிப்பு, சிறந்த நிர்வாக முறைமை, கட்டுக்கோப்பான தலைமைத்துவம் பயனாளிகளுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு மற்றும் ஏனைய அமைப்புக்களுடனான சிநேகபூர்வ தொடர்பாடல் ஆகியனவும் இதன் வெற்றிக்கு துணைபுரிந்தன.


மேலும் சிறந்த ஆவணமாக்கல், நிதி முகாமைத்துவம் போன்றனவும் நீர் கட்டணம் மூலம் பெறப்படும் சேகரிப்பினை கொண்டு இக்கிராமத்தினை சமூகபொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கான எதிர்கால திட்டங்களை கொண்டிருத்தல் போன்றன ஆலங்குளம் சனசமூக நிலையம் 2016 உலக நீர்தின போட்டியில் தேசிய மட்டத்தில் 3ம் இடத்தினை தட்டிக்கொள்ள ஏதுவாக நின்ற அடிப்படை அம்சங்களாகும்.

மேலும் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் கிராமிய நீர் மற்றும் சுகாதார பிரிவினதும் கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையினதும் தொழில் நுட்ப ரீதியான மற்றும் சமூகசார் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் ஆலங்குளம் சனசமூக நிலையம் இவ்வாறான தேசிய மட்ட அடைவினை எட்டுவதற்கு துணைநின்றன என்பது இங்கு சுட்டிகாட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

அத்துடன் சமூகசார் அடிப்படையில் முகாமைத்துவம் செய்யப்படும் ஏனைய கிராமிய நீர் வழங்கள் திட்டங்களுக்கும் அவைகளின் நிலைத்து நிற்கும் தன்மைக்கும் ஆலங்குளம் சமூகசார் அமைப்பினால் முகாமைத்துவம் செய்யப்படும் கிராமிய நீர்வழங்கல் திட்டம் சிறந்ததோர் முன்னுதாரணமாகும். 

ஆக்கம்:

M.S.M. Sarook
Sociologist
Regional Manager Office
National Water Supply & Drainage Board
Batticaloa.



SHARE

Author: verified_user

0 Comments: