12 May 2016

மகிழூரம்பதியின் காவலாள் கண்ணகிக்கு அலங்கார உற்சவம்-2016

SHARE
மட்டக்களப்பின் தெற்கே 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மகிழூர் கிராமத்தில் வீற்றிருந்து மக்களின் நோய் , பிணி தீர்த்து வரமருளும் கற்புக்கரசியாம் கண்ணகிக்கு மகிழூர் பெரும் பிரதேச மக்களால் ஆண்டுதோறும் எடுக்கப்படும் வருடாந்த திருச்சடங்கு இவ்வருடமும் 15.05.2016 அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 21.05.2016 திருக்குளிர்த்தி நிகழ்வுடன் இனிதே நிறைவுற இருக்கின்றது
15.05.2016 பணிக்கொணா குடிமக்களின் ஆலய திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பித்து 
இரண்டாம் நாள் பகல் 16.05.2016 தனஞ்சனார் குடி மக்களின் கன்னிக்கால் வெட்டும் சிறப்பு நிகழ்வு  இரண்டாம் நாள்  இரவு 16.05.2016 விளங்காமத்தான் குடி மக்களின் திருக்கல்யாணச்சடங்கும்  மூன்றாம் நாள் 17.05.2016 விளங்கமத்தான்  குடி மக்களிடம் இருந்து படையாட்சி குடி மக்களினால் கூறைதாலி மாறும் நிகழ்வு, திருமாங்கல்யதாரணம் போன்ற சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்று 
அதனை தொடர்ந்து .

படையாட்சி குடி சங்கரப்பெத்தான் குடி, களுவத்தன் பணிக்கன் குடி மக்களின் திருச்சடங்குகள் இடம் பெற்று  20,05,2016 அன்று பகல் வட்டுக்குத்து சிறப்பு நிகழ்வு இடம்பெற்று  21.05.2016 பெத்தான் குடி மக்களின் அம்மன் திருக்குளிர்த்தி சிறப்பு நிகழ்வுடன் அனைத்து நிகழ்வுகளும் இனிதே நிறைவுற இருக்கின்றது.


SHARE

Author: verified_user

0 Comments: