3 May 2016

கிழக்கு மாகாணத்தில் உள்ள 1832 முன்பள்ளிகள் தகிக்கும் உஷ்ணத்தினால் இன்று தொடக்கம் மூடப்படுகின்றன.

SHARE
கிழக்கு மாகாணத்தில் உள்ள 1832 முன்பள்ளிகள் தற்போது நிலவும் தகிக்கும் உஷ்ணத்தினால் இன்று 03.05.2016 செவ்வாய்க்கிழமை
தொடக்கம் மூடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தவிசாளர் பொன். செல்வநாயகம் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாலர் பாடசாலைகளையும் வெள்ளிக்கிழமை 06.05.2016 வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன் செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 12 மணியுடன் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து தற்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாலர் பாடசாலைகளையும் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை முழுமையாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 56650 சிறார்கள் முன்பள்ளிகளில் கற்கிறார்கள். சுமார் 4065 ஆசிரியர்கள் கடமை புரிகின்றார்கள்.

SHARE

Author: verified_user

0 Comments: