27 Apr 2016

சம்பூர் நிலக்கரி அனல் மின் நிலைய நிர்மாணிப்பு சூழல் மற்றும் அபிவிருத்தி மீதான றியோ Rio de Janeiro Earth Declaration 1992 பிரகடனத்திற்கு முரணானது இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

SHARE
தற்போது வாழ்பவர்களினதும் எதிர்கால தலைமுறையினரதும் அபிவிருத்தி மற்றும் சூழல்சார் தேவைகளை சமத்துவமாகப் பூர்த்தி செய்வதன் மூலம் அபிவிருத்திக்கான உரிமை என்பது நிறைவு செய்யப்படல் வேண்டும் என இலங்கை கைச்சாத்திட்டுள்ள றியோ
பிரகடனம் வலியுறுத்துகின்றது. Rio de Janeiro Earth Summit , Rio Summit, Rio Conference, and Earth Summit (Portuguese: ECO92), was a major United Nations conference held in Rio de Janeiro from 3 to 14 June 1992.
ஆனால், தற்போது திருகோணமலை சம்பூரில் அமைக்கப்படவுள்ள அனல் மின்நிலைய விடயத்தில் இப்பிரகடனம் கருத்திற்கொள்ளப்படாமல் பொருளாதார, சமூக, கலாசார உரிமையின் வழிகாட்டற் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் திங்களன்று (25) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சம்பூர் அனல் மின்நிலைய விடயத்தில் தனக்கிருக்கும் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பூலோக உச்சி மாநாட்டில் இலங்கை அரசாங்கமானது 1992இல் தனது சூழல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான 1992இற்கான நிகழ்ச்சித் திட்டத்தை சமர்ப்பித்துள்ளதோடு; எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் சகல மின்சார செயல் திட்டங்களிலும் அவற்றின் சமூக பொருளாதார சூழல் பாதிப்புக்கள் கருத்தில் கொள்ளப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.

ஆயினும், சம்பூர் அனல் மின் நிலைய விடயத்தில் இந்த உறுதியுரை மீறப்பட்டள்ளது.

கடந்த கால அடக்கு முறையான ஆட்சியாளர்களினால் சொந்த மண்ணில் இருந்து விரட்டப்பட்ட சம்பூர் மக்கள் நிம்மதியான வாழ்வினை நோக்கியுள்ள வேளையில் அந்த மக்களின் காணிகளும் சுகமான சுற்றுச் சூழலின் இயற்கைத் தன்மையும் அனல்மின் உற்பத்தி நிலையத்தினால் இழக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அபிவிருத்தித் திட்டங்களின் வடிவமைப்பில் றியோ பிரகடன கோட்பாடுகளை மதித்தல் நிலைபோறான அபிவிருத்தி இலக்காகும் இதனை நல்லரசாட்சி என்பது உறுதிப்படுத்த வேண்டும்

வட மாகாணத்தில் சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுபடல் தொடர்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடந்துள்ளது ஆனால், இதுவரைக்கும் அம்மக்களின் சமூக, சூழல் தாக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பூர் மக்கள் அவர்களுடைய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை மேற்கொள்வதனையும் சுதந்திரமாக நிர்ணயிப்பதற்கான உரிமையையும் கொண்டிருக்கின்றார்கள்.

சம்பூர் மக்களின் விருப்பத்திற்கு மாறாக றியோ பிரகடனத்திற்கு முரணாக நிர்மாணிக்கப்படவிருக்கும் நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையம் சூழல் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனைக் கருத்திற்கொண்டு இச்செயற்பாட்டினை சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE

Author: verified_user

0 Comments: