23 Apr 2016

இன்று உலகம் முழுவதும் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்படுகிறது.

SHARE
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதியாகிய இன்று உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்தல், புதிய புத்தகங்கள் வெளியாக உதவுதல், பதிப்புரிமை பெறுதல் போன்ற செயல்களை ஊக்குவிக்க இத்தினம் கொண்டாடப்படுகிறது. 
புத்தகம் மற்றும் நூலாசியர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. அவ்வகையில் ஷேக்ஸ்பியர் (Shakespeare) செர்வாண்டிஸ் (Cervantes,) போன்ற புகழ்பெற்ற இலக்கியவாதிகள் 1616, ஏப்ரல் 23 ஆம் திகதி மறைந்தனர். இலக்கியத்தில் நீங்கா இடம்பெற்றுள்ள இவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் இவர்களின் பிறப்பு மற்றும் இறப்பு திகதிகளை முக்கிய நோக்காக கொண்டே யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதியை புத்தக தினமாக அறிவித்தது.  
அதன்படி கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 100 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடுகின்றன.

ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையிலான தொடர்பினை சுட்டி நிற்கின்றது. பரம்பரை ரீதியிலான பரிமாற்றங்களுக்கும் உலகளாவிய ரீதியிலான கலை கலாசாரப் பரிமாற்றங்களுக்கிடையே புத்தகமானது ஒரு பாலமாக விளங்குகின்றது. அறிவு ரீதியிலான பரிமாற்றம், பண்புகள், நாகரீகங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வகையில் சிறந்த சாதனமாக புத்தகங்கள் விளங்குகின்றது என்றால் மிகையாகாது.
SHARE

Author: verified_user

0 Comments: