1 Sept 2015

துறைநீலாவனை கண்ணகி விளையாட்டுக் கழகத்தினால் மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

SHARE

துறைநீலாவனை கண்ணகி விiயாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது கடந்த சனிக்கிழமை (29) இரவு துறைநீலாவனை கிராமத்தில் கழகத்தின் தலைவர் ஆர்.ரவிந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

இதன் போது மட்டக்களப்பு அம்பாறையைச் சேர்ந்த 16 விளையாட்டக் கழகங்கள் பங்குப்பற்றினர். இந்நிகழ்வுக்கு துறைநீலாவனை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை தலைவர். கி.விஜயகுமார், கிராம சேவை உத்தியோகத்தரான தி.கோகுலராஜ், வ.கனகசபை, பொறியியலாளர். க.விஜயரதன், ஊடகவியலாளரான க.விஜயரெத்தினம், இ.சுதாகரன், கல்லாறு - துறைநீலாவனை பல்நோக்கு கூட்டறவு சங்க முன்னாள் முகாமையாளர் க.சரவணமுத்து, மாரியம்மன் ஆலய பரிபாலன சபை தலைவர் க.யோகராஜா, பிள்ளையார் ஆலய பரிபாலன சபை தலைவர் த.கணேசமூர்த்தி ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் மத்திய முகாம், கிறின் லைட் ஏ  அணியினர், பி  அணியினர் 1ஆம், 2ஆம் இடங்களையும், துறைநீலாவனை சுப்பர் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் 3ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

வெற்றி பெற்ற அணியினருக்கும், சிறந்த மின்னொளி வீரருக்கான விருதும், கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது. கிறின் லைட் ஏ அணியினர் சாம்பியனை சுவிகரித்துக் கொண்டனர். இந்நிலையில்,இக்கிராமத்திலிருந்து கடந்த காலங்களில் கரப்பந்தாட்ட போட்டிகளில் கிழக்கு மாகாண ரீதியில் போட்டியிட்டு பல வெற்றிக்கிண்ணங்களையும், பணப்பரிசுகளையும் பெற்ற மூத்த கரப்பந்தாட்ட வீரர்களான க.சரவணமுத்து, க.யோகராஜா, க.கோபால், த.கணேசமூர்த்தி ஆகியோர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு விளையாட்டு சாதனையாளர் என்ற கௌரவ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கதாகும்.











SHARE

Author: verified_user

0 Comments: