2 Aug 2015

தையல் இயந்திரங்ககள் வழங்கி வைப்பு

SHARE

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்தா, தொழில் நுட்பக் கல்லூரியில் தையல் பயிற்சியை நிறைவுசெய்து, முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு, இலவசமாக தையல் இயந்திரங்களை லயன்ஸ் கழகத்தினூடாக வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (02)  புதுக்குடியிருப்பு விவேகானந்தா, தொழில் நுட்பக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. 

6 மாதங்கள் தொடர்ச்சியாக இப்பயிச்சியியைப் பூர்தி செய்து, திறமையினை வெளிக்காட்டிய, 3 பயிலுனர்களுக்கு இலவசமாக இதன்போது தையல் இயந்திரங்கள் லயன்ஸ் கழகத்தின், வத்தளை கிளசிக் லயனினால் வழங்கப்பட்டன.

சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமூக நலன்புரி அமைப்பின் திட்ட அபிவிருத்தி ஆலோசகர் எம்.புஸ்பராஜன், பணிப்பாளர்.க.பிரதீஸ்பரன், இணைப்பாளர் க.விக்னேஸ்வரன், லயன் கழகத்தின், வத்தளை கிளசிக் லயன் தலைவர், லயன் டாக்கடர் சு.மகேஸ்வரி, சுயதொழில் வேலைவாய்ப்பு செயற்பாட்டுக்குழு தலைவர், லயன் செல்வரெத்தினம் நிமால், கழக செயற்பாட்டுத் தலைவர் லயன் ஜெயப்பிரகாஸ் ஜோன் உட்பட பலர் கலந்து இதன்போது கொண்டிருந்தனர்.












SHARE

Author: verified_user

0 Comments: